பேரிடர் நிவாரண நிதியை எப்போது தருவீர்கள் என்ற MP கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

‘நிவாரணம் கிடையாது’ என ராஜ்யசபாவில் மத்திய அரசு பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ள நிலையில் இந்த விஷயம் தொடர்பான உண்மை நிலவரம் வருமாறு:

ராஜ்யசபாவில் நேற்று தி.மு.க., – எம்.பி., சிவா பேசும்போது, ”மத்திய குழு அறிக்கை அளித்த ஒரு மாதத்திற்குள் பேரிடர் நிவாரண நிதி வழங்கிட வேண்டுமென்று விதிமுறைகள் இருந்தபோதிலும், அதை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவது ஏன்.நிதியை விரைந்து விடுவிப்பதற்கு பரிசீலிக்க முடியுமா” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதில்: தேசிய பேரிடர் மேலாண்மை நிர்வாகத்திற்கு என, தேசிய அளவில் கொள்கை உள்ளது. இதன்படி, கீழ்மட்ட அளவில் நிவாரண உதவிகளை அளிப்பது மற்றும் பேரிடர் நிர்வாக மேலாண்மை செய்யும் பொறுப்பு ஆகியவை மத்திய, மாநில அரசுகளை சார்ந்தது. மத்திய அரசை பொறுத்தளவில் தேவையான அடிப்படை உதவிகள் மற்றும் நிதி ஆதரவு ஆகியவற்றை அளிக்கும்.

வெள்ளம், நிலச்சரிவு உட்பட 12 வகையிலான இயற்கை பேரிடர்கள் பட்டியலில் உள்ளன. இவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநில அரசே நிதியை வழங்கிட முடியும். அதேசமயம், அது விதிகளுக்கு உட்பட்டதாகவும், மத்திய அரசின் ஒப்புதலோடு, ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியாகவும் இருக்க வேண்டும்.

இயற்கை பேரிடரின் அளவு மோசமாக இருக்கும் பட்சத்தில், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதியுதவி அளிக்கப்படலாம். அந்த நிதியுதவியும், மத்திய அமைச்சகங்கள் குழு நேரடியாகச் சென்று பார்வையிட்டு, அந்த குழு அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் விதிகளுக்கு உட்பட்டே இருக்கும்.

முன்பெல்லாம் பேரிடர் நிகழ்வுடன், மாநில அரசு கேட்டுக்கொண்ட பின்னரே, மத்திய அமைச்சர் குழு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால், 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 19ல் எடுக்கப்பட்ட மத்திய அரசின் முடிவின்படி, மாநில அரசின் தகவலுக்கு காத்திருக்காமல், பேரிடர் நிகழ்ந்தவுடன் உடனடியாக மத்திய குழு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்வதோடு, சேதாரங்கள் மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும் வகையில் இந்த குழு செல்கிறது. அறிக்கை தாக்கல் செய்த பிறகும் கூட தேவைப்படும் பட்சத்தில், இந்த மத்திய குழு மீண்டும் ஒருமுறை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும். மாநில அரசின் கோரிக்கைகள் அடிப்படையில் மத்திய குழு, தன் இறுதி அறிக்கையை தயார் செய்யும்.

அரசியலமைப்பு சட்டம் 29ன் கீழ், நிதிக்குழு அளிக்கும் அந்தந்த நேரத்து பரிந்துரைகளின் அடிப்படையில் தான், மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மாநில பேரிடர் நிவாரண நிதியை, இதற்கென இருக்கக்கூடிய விதிகளின்படியே செலவிட வேண்டும். இந்த விதிமுறைகளின் அடிப்படையில் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க, மாநில அரசுக்கு சுதந்திரம் உண்டு.

பட்டியலில் வராத பிற பேரிடர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான வருடாந்திர ஒதுக்கீட்டில் 10 சதவீத நிதியை மட்டும் உடனடி உள்ளூர் பேரிடர் நிவாரண பணிகளுக்கு என விதிமுறைகளுக்கு உட்பட்டு செலவு செய்து கொள்ள மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...