இந்தியா எப்போது வேண்டுமானாலும் பதலடிதரலாம் என நினைத்த பாகிஸ்தான் உயர் கண்காணிப்பு, ரேடார் மேற்பார்வை என ராணுவம் உஷார் நிலையில் இருந்து வந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் உஷார் நிலை கண்ணில் மிளகாய்பொடியை தூவிட்டு, தாக்குல் நடத்துவதற்கு முன்பாக பாலகோட் முகாமில் பயங்கரவாதிகள் நிம்மதியான உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்துகொண்ட இந்திய விமானப்படை, அவர்களை அப்படியே நிரந்தரமான தூக்கத்திற்கு அனுப்பிவைக்க திட்டமிட்டு, சர்ஜிக்கல் தாக்குதல் முறையில் அதிரடியாக நுழைந்து ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது அதிரடியாக இன்று அதிகாலை வெடிகுண்டு மழை பொழிந்து மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தியது.
அடுத்த மூன்றே நிமிடங்களில், அதாவது 3.48 நிமிடங்களுக்கு இரண்டாவது தாக்குதலாக முசாபர்பாத் என்ற பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அடுத்ததாக குண்டு மழைகளை பொழிந்தது. அடுத்த 10 நிமிடங்களில் மூன்றாவது தாக்குதலாக சக்கோதி என்ற பகுதியில் உள்ள முகாம்கள்மீது குண்டுகளை பொழிந்தது. அதிகாலை 21 நிமிடங்களில் மூன்று முகாம்களையும் வெற்றிகரமாக தகர்த்து அழித்துவிட்டு தாயகம் திரும்பியுள்ளது இந்திய விமானப்படை விமானங்கள்.
இந்த தாக்குதலுக்கு இந்திய விமானப்படையின் 12 மிராஜ் 2000 வகை போர்விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயன்படுத்தி பயங்கரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்துள்ளது. இதில் பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்தி விமானப்படை விமான தாக்குதலை அடுத்து பாகிஸ்தானின் எஃப்16 வகை விமானங்கள் இந்தியத் தரப்பைத் தாக்க வந்ததாகவும், ஆனால் மிராஜ் 2000 வகை போர் விமானங்களின் அணிவகுப்பு அளவைப் பார்த்து பயந்த பாகிஸ்தான் விமானங்கள் பயந்து ஒடியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. லேசர் உதவியுடன் சரியாக இலக்குகளை குறிவைத்து மிக குறைந்த உயரத்தில் பறந்து சென்று குண்டு மழைகளை பொழிந்துள்ளது.
விமானப்படையின் தாக்குதலை எதிரிகள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக பகல் நேரத்தை தவிர்த்துவிட்டு நல்லுறக்க நேரமான அதிகாலையில் அதிரடி நுழைந்து தாக்குதலை நடத்தி எச்சரித்துவிட்டு வந்துள்ளது. இந்திய விமானப்படை. அப்பாவிகளுக்கு பாதிப்பில்லாமல் பயங்கரவாத முகாம்களை துவசம் செய்து விட்டு வந்த விமானப்படைக்கு ஒரு சபாஷ்.
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.