கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று வெளியிடப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் கார்கில் போரில் நமது ராணுவ வீரர்களின் ஒப்பற்ற வீரம், உறுதி, தியாகம் ஆகியவற்றுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தபால் துறை சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.

கார்கிலின் திராஸ் பகுதியில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா பங்கேற்று பேசுகையில், இந்த தபால் தலை நமது ராணுவ வீரர்களின் தீரத்தை கௌரவிப்பது மட்டுமின்றி அவர்களின் வீரத்தை நினைவுபடுத்தவும், தேசத்தின் பெருமித உணர்வை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது என்றார். நமது வரலாற்றில் முக்கியமான தருணத்தை இந்த அர்த்தமுள்ள தபால் தலை வெளியீடு உருவாக்கி உள்ளது என்றும், இதற்காக தபால் துறையை பாராட்டுவதாகவும் அமைச்சர் கூறினார்.  இந்த தபால் தலையை அனைத்து குடிமக்களும் வாங்குவதற்கு தாம் ஊக்கப்படுத்துவதாகவும், இது வெறும் சேகரிப்புக்கானதல்ல, நமது நன்றியின் அடையாளம், நமது தேசத்தை பாதுகாத்தவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க ...

இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை சதி அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறை ...

பயங்கரவாத நடவடிக்கைகளை இன்றைய ...

பயங்கரவாத நடவடிக்கைகளை இன்றைய இந்தியா துளியும் சகித்துக்கொள்ளாது – வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கர் ''பயங்கரவாத நடவடிக்கைகளை, இன்றைய இந்தியா துளியும் சகித்துக் கொள்ளாது. ...

வடகிழக்கு மாநிலங்களை குறைத்து ...

வடகிழக்கு மாநிலங்களை குறைத்து எடை போட்டது காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி ''காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசு வடகிழக்கு மாநிலங்களை அதன் ...

ஏக்நாத் ஷணடே எந்த இலாக்காவும் க ...

ஏக்நாத் ஷணடே எந்த இலாக்காவும் கேட்கவில்லை – முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் 'ஏக்நாத் ஷிண்டே எந்த இலாக்காவும் கேட்கவில்லை. டிசம்பர் 16ம் ...

தி.மு.க.-வின் மிரட்டலுக்கு ப.ஜ.க. அ ...

தி.மு.க.-வின் மிரட்டலுக்கு ப.ஜ.க. அஞ்சாது – அண்ணாமலை பேச்சு 'தி.மு.க., அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை, வழக்கு தொடருவோம் ...

புயல் பாதிப்பை பார்வையிட வந்த ம ...

புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்தியக்குழு முதற்கட்டமாக 945 கோடி நிவாரணம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, நேற்று ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...