உக்ரைன்மீது ரஷ்ய போர் தொடுத்துவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
உக்ரைன் மீது ரஷ்யபடைகள் ராணுவ நடவடிக்கை எடுக்க அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவருகின்றன.
உக்ரைனில் உள்ள ராணுவதளங்கள், விமான தளங்கள் மீது ரஷ்யபடைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான போரை ரஷ்ய நிறுத்த உலகநாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உக்ரைன்- ரஷ்யா போர் குறித்து பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
மூத்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திவருகிறார். ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திரமோடி பேச வேண்டும் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதுபோல் உக்ரைனில் உள்ள தற்போதைய நிலை குறித்தும் அந்நாட்டு அதிபருடன் இந்திய பிரதமர் பேச வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |