நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து காணப்படும். இலை நன்கு பளபளப்புடன் காணப்படும்.
கீரை வகைகளில் இவ்வளவு ருசியுள்ள கீரையைப் பார்க்க முடியாது. தேங்காய் இட்டுத் துவரன் (பொரியல்) வைத்துச் சாப்பிட்டால் இதன் ருசியே தனிதான். இந்தக் கீரையைப் பச்சையாகத் தின்றால் வழவழப்பாக இருக்கும்.
இந்தக் கீரையைத் தின்னும் பேரு பெற்றவர்கள் நிச்சயமாக நீரிழிவு என்னும் சர்க்கரை நோயால் துன்பப்படவே மாட்டார்கள். நீரிழிவு நோயை வர விடாமல் செய்யும் அற்புத ஆற்றல் பெற்றதாகும் இது. எனவே இந்த நோயுள்ளவர்களுக்கு இதைக் கொடுத்தும் குணமாக்கலாம்.
இதைப் போன்று பித்தம் அதிகமாகிப் பைத்தியம் என்ற நிலைக்குச் சென்று விட்டவர்களையும் இந்தக் கீரையை உட்கொள்ளச் செய்து குணப்படுத்தி விடலாம். இரத்தப்பிரமேகத்தால் அவதிப்படுபவர்களுக்கும் இது நல்ல மருந்தாகும்.
தாதுவைப் பெருக்கி ஆண்தன்மையை அதிகப் படுத்தும் ஆற்றலுள்ளதாகும். பேதியைக் கட்டுப் படுத்தும் திறனும் இதற்கு உண்டு. நல்ல ருசியுள்ள இந்த கீரை அற்புதமான மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.