ஸ்டெர்லைட் ஆலையின் நிலைப்பாடு என்ன என்பதை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன் குறிப்பிட வில்லை என தமிழக பாஜக தலைவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை செளந்தர ராஜன் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடியில் சனிக் கிழமை அவர் அளித்த பேட்டி: திமுகவின் பிரதான தலைவர்களில் ஒருவர் நிற்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தங்களின்நிலைப்பாடு என்ன என்பதை தேர்தல் அறிக்கையில் திமுக ஏன் குறிப்பிடவில்லை?
மாநிலங்களவை கூட்டங்களில் கனிமொழி 56 சதவீதம் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். மிகக்குறைந்த அளவில் கலந்துகொண்ட கடைசி மூன்று பேரில் கனிமொழியும் ஒருவர்.
முழுமையாக மக்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் போட்டியிடுகிறோம். வேலைவாய்ப்பு உள்ளிட்ட நல்ல திட்டங்களை கொண்டுவருவோம். நீட் தேர்வு தமிழக மக்களுக்கு மிகவும் நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து. விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்புத் திட்டம் மூலம் அதிக பயனடைந்த மாவட்டம் தூத்துக்குடி ஆகும்.
பொதுதளத்தில் பொது எதிரியை வீழ்த்துவதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக.,வுக்கு முரணான சிலகருத்துகளை பதிவு செய்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். இதில் இருந்தே அதிமுகவுக்கு பாஜக எந்த அழுத்தமும் கொடுக்க வில்லை என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
விமானத்தில் வரும்போது தன்னிடம் நேர் எதிரே யாராவது பேசினால், அப்போது கருத்துசுதந்திரம் பற்றி கனிமொழிக்கு தெரிந்திருக்கும். 1975 ஆம் ஆண்டில் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மீது காங்கிரஸ் கட்சியில் கருத்துசுதந்திரம் நசுக்கப்பட்ட நிலையில், அதே கட்சியுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளதை திமுக நினைத்துப் பார்க்க வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலின் தவறான கருத்துகளையும், வரம்பு மீறியும் தொடர்ந்து பேசி வருகிறார். இலங்கை தமிழர் விவகாரத்தில் திமுகவுக்கும், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் உள்ள நிலைப்பாடு என்ன என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். கடந்த காலங்களில் திமுக குறித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்த விமர்சனங்களை மறந்துவிட்டு தற்போது கூட்டணி வைத்துள்ளனர்.
அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கூட்டு முயற்சியாலும், தூத்துக்குடி மக்களின் அன்பான ஆதரவாலும் பாரதிய ஜனதா கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்றார் அவர்.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.