தமிழக பாஜக. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. கூட்டணியை எதிர்க் கட்சிகள் தொடர்ந்து விமர்சிப்பது அவர்களது இயலா மையை காட்டுகிறது. மிஷன்சக்தி சாதனையை மோடி பகிர்ந்துகொண்டதில் தவறில்லை. மிஷன் சக்தி சாதனையிலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஏழைகளை பற்றி சிந்திக்காதவர். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்குவந்தால் தூத்துக்குடி துறைமுகத்தை தனியாருக்கு தாரை வார்த்து விடுவார்கள் என்று பீட்டர் அல்போன்ஸ் தவறானவாதத்தை தெரிவித்து வருகிறார். சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நிதி ஒதுக்கப்பட்ட பின்னரே மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தேர்தல் பிரசாரத்திற்காக வருகிற 2-ந்தேதி பா.ஜ.க. தேசியதலைவர் அமித் ஷா தூத்துக்குடி வருகிறார். அதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்கிறார். குற்றப்பரம்பரை என தெரிவித்ததை தவறாக சித்தரிக்கின்றனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதாக கூறி மக்களை ஏமாற்று கின்றார்கள். நான் வெற்றி பெற்றால் தூத்துக்குடியில் பன்னாட்டு விமான நிலையம், புல்லட் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.