மு.க.ஸ்டாலின் சுயபுத்தி இல்லாதவர்

பாஜக. மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:-

நாடு விண்வெளியில் முன்னேறியிருக்கிறது என்பதை பிரதமர் நரேந்திரமோடி கூறியிருப்பது தேர்தல் விதிமுறை மீறல் இல்லை. பா.ஜ.க. தேசிய செயலாளரும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான எச்.ராஜாவை பற்றி மிகவும்மட்டமாக, பேசக்கூடாத வார்த்தைகளை திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

எச்.ராஜாவை தனிப்பட்ட முறையில் தாக்கும்வகையில் மிகவும் தரம்தாழ்ந்த விமர்சனங்களை மு.க.ஸ்டாலின் முன் வைத்தது கண்டிக்கத்தக்கது. அதற்கு பதிலாக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் உள்ள வேட்பாளர்களின் லட்சணங்களை மக்கள் மத்தியில் முக.ஸ்டாலின் சொல்லலாம்.

கிருஷ்ண பகவான் குறித்து தெரிவித்த கருத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மன்னிப்பு கேட்கவேண்டும்.

திமுக. மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு நிச்சயம் வெற்றிகிடைக்காது. பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 2-தேதி (நாளை மறுதினம்) தமிழகம் வருகிறார். அன்றைய தினம் காலை 11 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதனைதொடர்ந்து சிவகங்கை மற்றும் கோவையில் நடைபெறும் கூட்டங்களிலும் அமித் ஷா பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்.

பிரதமர் நரேந்திரமோடி வருகிற 8-ந்தேதி கோவையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

துரைமுருகன் வீட்டில் வருமானவரி சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி எதை சொல்கிறாரோ, அதையே முக.ஸ்டாலினும் சொல்கிறார். மு.க.ஸ்டாலினுக்கு சுயபுத்தி கொஞ்சம்கூட இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...