இனித்தால் படிக்கலாம்

இந்தியாவில் புதிய கல்விக்கொள்கையை அதற்கான அமைக்கப்பட்ட திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள் குழு மத்திய அரசுக்கு ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது.

அது ஓர் பரிந்துரைத்தான் … அந்த பரிந்துரையில் மும்மொழிக் கொள்கை பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அது மத்திய அரசாளும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை,முடிவும் செய்யப்படவில்லை ஆனால் அதற்கு முன்பே ஏதோ இந்தி திணித்து விடுவதைப்போல ஸ்டாலின்,வைகோ,முத்தரசன்,சிதம்பரம் போன்றவர்கள் கூட கடுமையான கண்டனத்தை இல்லாத இந்தி திணிப்பை நோக்கி செலுத்தியிருக்கிறார்கள்… எங்கேயாவது போராட்டம் நடத்த வழி கிடைக்காதா? என தேடித்திரிபவர்களுக்கு இல்லாத இந்தி திணிப்பை காரணமாகக் கொண்டு சுயலாப போராட்டங்கள் நடத்தலாம் என ஆயத்தமாகி வருகிறார்கள்.

மத்தியில் ஆட்சிக்கு வரமுடியவில்லை என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். இல்லாத இந்தி திணிப்பை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவ்டேகர் தெளிவாகச் சொல்லிவிட்டார் எந்த மொழியும் எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது என்று. அதே போல் இன்றைய மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ரமேஷ் போக்கிரியால் நிஷாங் அவர்களும் இந்தி திணிக்கும் எண்ணமில்லை என்று கூறியிருக்கிறார். இதே கருத்தை பிரதமர் அலுவலகமும் தெரிவித்து இருக்கிறது

முன்மொழிக்கொள்கை என்பது பரிந்துரைத்தல் மட்டுமே ,கொள்கை முடிவல்ல என்பதையும்,தெளிவாகச் சொன்ன பிறகும் ஏதோ இந்தி திணிக்கப்பட்டதை போல தொலைக்காட்சிகள் கருத்துக்களை தெரிவிப்பது சரியல்ல.இல்லாத கறுப்புப் பூனையை இருட்டில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள் அறிக்கை எப்படி இப்படி ஒரு அறிக்கை தரலாம் என ஸ்டாலின் கேட்கிறார். அறிக்கை கொடுக்கலாம் அதை ஏற்றுக்கொண்டால்தானே கொள்கை முடிவு ? நான் கேட்கிறேன் ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சி கையெழுத்திட்டார்…

ஏன் ஆராய்ச்சி அனுமதித்து கையெழுத்திட்டார்… முதலிலேயே முடியாது என்று சொல்லவில்லை?

ஆக இனித்தால் படிக்கலாம் திணித்தல் இல்லையென்றும் சொல்லியாகிவிட்டது.விருப்பம் இருந்தால் படிக்கலாம் வெறுப்பு இருந்தால் வேண்டாம் என்றும் சொல்லியாகிவிட்டது. தேவையென்றால் படிக்கலாம் தேவை இல்லையென்றால் விட்டுவிடலாம் வெறும் இது வரைவு அறிக்கைதான் ஆக ஏதாவது காரணம் கிடைக்காதா? போராட்டம் நடத்த எனக் காத்துக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் ஏமாந்துதான் போவார்கள் …

அதைவிட வேடிக்கை காங்கிரஸ் முதல்வர் பக்தவச்சலம் ஆட்சி காலத்தில்தான் இந்தி திணிப்பும், எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கி சூடும் நடந்தது. அதை எல்லாம் மறந்துவிட்டு இன்றைய காங்கிரஸ்காரர்கள் திமுகவுடன் சேர்ந்து இந்தியை எதிர்ப்பதாக சொல்வதுதான் நாடகம்.இந்தியை மத்திய அரசின் அலுவல்களில் பயன்பாட்டை அதிகரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்ட ப.சிதம்பரம் இன்று இந்தி பயன்பாட்டை கண்டிப்பது வேடிக்கை?

 

தமிழக பாஜக தலைவர்

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...