‘சென்னை வெள்ள விவகாரத்தை திசை திருப்பவே கவர்னர் பிரச்னையை தி.மு.க,.,வினர் கையில் எடுத்து இருக்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் கவர்னரை தொடர்புபடுத்துவது சரியல்ல’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
இந்தி மாத கொண்டாட்ட விவகாரத்தில் தி.மு.க.,வின் குற்றச்சாட்டு மக்களை திசை திருப்பும் செயல். மத்திய பா.ஜ., அரசு தமிழுக்கு உரிய மரியாதை அளித்து வருகிறது. எல்லாம் விஷயத்திலும் அரசியல் செய்யக் கூடாது. சென்னை வெள்ளம் விவகாரத்தை திசை திருப்பவே கவர்னர் பிரச்னையை தி.மு.க,.,வினர் கையில் எடுத்து இருக்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் கவர்னரை தொடர்புபடுத்துவது சரியல்ல.
தி.மு.க., நினைக்கும் அரசியல் எல்லாம் இப்பொழுது பண்ண முடியாது. மக்கள் தெளிவாக இருந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தி மொழிக்கு யாரும் ஆதரவாளர்கள் கிடையாது. அதேநேரத்தில் எதிர்ப்பாளர்களும் கிடையாது. சி.பி.எஸ்.,இ., பள்ளியில் இந்தி ஒரு மொழியாக இருக்கிறது எனக் கூறி பள்ளி நடத்தும் தி.மு.க.,வினர் இழுத்து மூட ரெடியா? இது அவர்களுக்கு வருமானத்தை கொடுக்கிறது.
தி.மு.க.,வினர் ஆக்கபூர்வமான அரசியலை செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளை ஒழியுங்கள். தமிழகத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களை தீட்டுங்கள். மொழிகளை வைத்து மக்களை ஏமாற்ற வேண்டாம். தமிழை உலக அளவில் எடுத்து செல்வதில் முதன்மையாக இருப்பது பிரதமர் மோடி தான். ஒட்டுமொத்த தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |