குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி நாளை (27 நவம்பர் 2024) புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெறும் விழாவில் “பால் விவாகம் முக்த் பாரத்” என்ற தேசிய இயக்கத்தை தொடங்கிவைக்கிறார். இவ்விழாவில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் பங்கேற்கிறார்
2015-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட முன்னோடித் திட்டமான ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் வெற்றியானது பெண் குழந்தைகள் மீதான அணுகுமுறை மற்றும் நடத்தைகளில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்த வெற்றியின் உந்துதலாலா தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் குழந்தை திருமணத்திலிருந்து நாட்டை விடுவிப்பதில் கவனம் செலுத்தும். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்க பெண்களிடையே திறன், மேம்பாடு, தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கான நடைவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதிலும், அனைத்து நிலைகளிலும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மனித உரிமை மீறல்களின் மிக மோசமான வடிவங்களில் ஒன்றான குழந்தை திருமணத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது கவலைக்குரிய விஷயமாகும்.
குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு இத்திட்டம் ஆதரவளிக்கும்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |