8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அமைச்சரவையில் பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல் விவகாரங்கள், பார்லிமென்ட் விவகாரம், முதலீடு மற்றும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மற்றும் திறன்மேம்பாடு உள்ளிட்ட அமைச்சரவை குழுக்களில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
இதன்படி நியமனங்களுக்கான அமைச்சரவை குழு, வீட்டு வசதி அமைச்சரவை குழு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, பாதுகாப்பிற்கான அமைச்சரவை குழு, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழு, வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டு அமைச்சரவை குழு ஆகியவை மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.
முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவைக் குழு: 5 உறுப்பினர்கள் கொண்ட முதலீட்டுக்கான குழுவில் பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின்கட்கரி, பியூஷ்கோயல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான குழு: 10 பேர் கொண்ட இந்தகுழுவில் பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், நரேந்திரசிங் தோமர், ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான், மகேந்திர நாத் பாண்டே, சந்தோஷ் குமார் கங்வார், ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு: பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |