முன்னாள் பிரதமர்களுக்கு பிரமாண்ட அருங்காட்சியகம்

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் குறித்து மாநிலங்களவை துணைதலைவர் ஹரிவன்ஸ் எழுதி உள்ள புத்தகத்தை டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டார். இதனை குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பெற்றுக் கொண்டார். புத்தகத்தை வெளியிட்ட பின்னர் பேசிய பிரதமர் மோடி, கலாச்சாரம் மற்றும் கொள்கை பிடிப்புள்ளவராக சந்திர சேகர் வாழ்ந்தார் என்றார்.

முன்னாள் பிரதமர் சந்திர சேகரை சந்தித்தது குறித்துபேசிய பிரதமர், டெல்லிக்கு வந்தால் எனனை சந்திக்க வேண்டும் என சந்திரசேகர் கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி, அவரை சந்திக்க சென்றதாகவும், அப்போது, அவர் குஜராத்தின் வளர்ச்சிகுறித்து கேட்டார், மேலும் பல தேசிய பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதன்தொடர்ச்சியாக, இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் பிரமாண்டமாக டெல்லியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார். எனவே முன்னாள் பிரதமர்களின் வாழ்க்கைமுறை குறித்து அவரவர் குடும்பத்தினர் தெரிவிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் எனத்தெரிவித்தார்.

அத்துடன் முன்னாள் பிரதமர்களின் பரிசு பொருட்களையும், அவர்கள் எழுதியநூல்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அரசுக்கு, முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினர் வழங்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். முன்னாள் பிரதமர்களின் அருங்காட்சியகம் மூலம் பள்ளிமாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் முன்னாள் பிரதமர்களின் வாழ்க்கை வரலாற்றை எளிதில் அறிந்துகொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், இந்திய குடியரசுத்துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...