இந்தியா மீண்டும் ஒரு நாள் உலக நாடுகளின் தலைமையாக உருவாகும்

ஜார்க்கண்ட் மாநிலம், சிம்டேகா மாவட்டத்தில் ராமரேகை கோயில் உள்ளது. ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும் 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற போது, ராம ரேகை என்ற இடத்தில் சிலநாள்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அங்குள்ள குகையில் ராமர் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக்கோயிலில் வழிபடுவதற்காக மோகன் பாகவத், புதன் கிழமை சிம்தேகா மாவட்டத்துக்கு வருகைதந்தார். பின்னர், விசுவ ஹிந்து பரிஷத், ஹிந்து தர்ம ரக்ஷா சமிதி, தாம் விகாஸ் சமிதி ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:புனிதத்தலங்களின் பெருமை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த தலங்களுக்குச் சென்று வழிபடுவதை அதிருஷ்டமாகக் கருதுகிறேன்.
சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் மட்டுமே ஹிந்துக்கள் என்ற தவறானகருத்து நிலவுகிறது. சனதான தர்மம் உண்மையை அடிப்படையாக கொண்டது. எனவே, இதை நீங்கள் மனதில்நிறுத்தி அச்சமின்றி இறைச்சேவை புரிய வேண்டும்.

இந்தியா ஒருதேசம்; இதில், ஜாதி, மத ரீதியில் பாகுபாடுகிடையாது என்று நமது அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. நான் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவன், நீங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், நாம் அனைவரும் இந்தியர்கள். உலகம், நம்மை அப்படித் தான் அழைக்கிறது. மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்றே சனாதன தர்மம் கற்பிக்கிறது. இந்தியா மீண்டும் ஒரு நாள் உலக நாடுகளின் தலைமையாகமாறும் என்றார் மோகன் பாகவத்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...