குலாம் நபி ஆசாத்தின் கருத்து துரதிருஷ்ட வசமானது

தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலை விமர்சித்த குலாம் நபி ஆசாத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது!

கடந்த செவ்வாய் அன்று தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்துக்கு சென்று, காஷ்மீரின் நிலைகுறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நடைபாதையில் மக்களுடன் சேர்ந்து அவர் உணவுசாப்பிடுவதும், அவர்களுடன் உரையாடுவதும் புகைப் படங்களாகவும், வீடியோவாகவும் வெளியாகி ‘வைரல்’ ஆனது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திடம் கேட்ட போது, “பணத்தால் யாரை வேண்டுமானாலும் வாங்கலாம்” என்று கூறினார்.

அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. கட்சி உறுப்பினர்கள் கடும்கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் தெரிவிக்கையில்.,

குலாம் நபி ஆசாத்தின் கருத்து துரதிருஷ்ட வசமானது. நான் வன்மையாக கண்டிக்கிறேன். பாகிஸ்தானிடம் இருந்துதான் இத்தகைய குற்றச் சாட்டுகளை எதிர்பார்க்க முடியும். ஆனால், காங்கிரஸ் போன்ற பெரிய அரசியல் கட்சியிடம் இருந்து இதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. இந்த குற்றச்சாட்டை சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆகவே, ஆசாத் உடனடியாக மன்னிப்புகேட்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ், செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சம்பித் பத்ரா தெரிவிக்கையில்., “இந்தியாவில் நல்ல விஷயங்கள் நடக்கும் போதெல்லாம், பாகிஸ்தானும், காங்கிரஸ் கட்சியும் ஒரேகுரலை எதிரொலிக்கின்றன. ஒன்று பாகிஸ்தான் காங்கிரஸ் குரலை எதிரொலிக்கும், அல்லது காங்கிரஸ் பாகிஸ்தான்குரலை எதிரொலிக்கும். தற்போது இதுதான் நடந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...