மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் நினைவாக டெல்லியில் இன்று நடந்த இரங்கல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது, “சுஷ்மா சுவராஜ் தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளிலும் தன்னால் முடிந்தளவிற்கு சிறப்பாக செயல்பட்டார். தனது தனிப்பட்ட வாழ்விலும் நிறையசாதித்துள்ள அவர் பாரதீய ஜனதா கட்சியில் இருக்கும் இளம் ஊழியர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாவார்.
சுஷ்மா ஸ்வராஜ் தனது சொந்தவாழ்க்கையில் நிறைய சாதித்த போதிலும், எந்த பணியைக் கொடுத்தாலும் அதற்கு தன்னையை அர்ப்பணிப்பார். பாஜக இளம்தொண்டர்களுக்கு அவரைக் காட்டிலும் பெரிய உத்வேகம் இருக்கமுடியாது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் பிரச்னைகளை தனது சொந்தப் பிரச்னைகளாக நினைத்துக் கொள்வார். வெளியுறவு அமைச்சகத்தின் குணத்தையே அவர் முற்றிலுமாக மாற்றினார். கடந்த 70 ஆண்டுகளில் நாட்டில் 77 பாஸ்போர்ட் அலுவலகங்கள் இருந்தது. அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில், தற்போது இந்தியாவில் 505 பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளது. இதிலிருந்தே அவரதுபணியின் வீரியத்தை நாம் உணரலாம்.
ஐ.நா சபையில் நான் எனது முதல்உரையை நிகழ்த்துவதற்குத் தயாராக இருந்தேன். அவர், என்னுடைய உரை எங்கே என்றுகேட்டார். நான் எழுதிக்கொள்ளாமலே உரையாற்றுவேன் என்று அவரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் அதை கடுமையாக எதிர்த்தார். இதையடுத்து, அவருடன் இணைந்து முந்தைய நாள் இரவு உரையைத் தயார்செய்தோம்.
பின்னர் அவர் என்னிடம் தெரிவித்தார், நீங்கள் எவ்வளவு பெரியபேச்சாளராக வேண்டுமானாலும் இருக்கலாம், அவைகளுக்கு என்று ஒரு சில நல்லொழுக்கங்கள் உள்ளது. அதற்கான பயிற்சிகள் மிகமுக்கியம் என்றார். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் இது”
பாஜகவின் மூத்த தலைவரும் மத்தியவெளியுறவு முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 6-ஆம் தேதி உயிரிழந்தார். அவருடைய மறைவையொட்டி தில்லியில் இரங்கல்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது,
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |