சுரேந்திரன் மதுரை கோட்டத்தின் தவிர்க்க முடியாத தலைவன்

ஜனா ஜியுடன் மிக நெருக்கமாக இருந்த முன்னாள் பிரச்சாரக் மதுரை ராமசாமிஜி (என் நண்பர் காலம்சென்ற வெங்கடேஷ்ஜியின் அப்பா) மதுரை மாநகர் மாவட்டத் தலைவராக இருந்த போது 1989ம் ஆண்டு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டவர் சுரேந்திரன். திருமங்கலம் அருகே பூர்வீக கிராமம். மதுரையில் செட்டில் ஆகி விட்டார். 1992ம் ஆண்டு வாக்கில் கட்சியில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார்.

மாவட்ட இளைஞரணி பொ.செ ஆக பதவி வகித்தது முதல் பொறுப்பு. 1995 முதல் 1999வரை மதுரை மாநகர் மாவட்ட செயலாளர், பொது செயலாளர் (அப்போது அண்ணன் மதுரை முரளி மாவட்டத் தலைவர்) என படிப்படியாக முன்னேறி, 2000ம் ஆண்டில் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ஆனார்.

அதன் பின்னர் மாநில செயற்குழு உறுப்பினர், மாநில செயலாளர் (2010 முதல் 2014 ஜூலை) துணை தலைவர் (2014 ஜூலை முதல்) என படிப்படியாக கட்சியில் வளர்ந்தார்.

2012ம் ஆண்டு அண்ணன் பொன் ராதாகிருஷ்ணன் மாநில தலைவராக இருந்த போது நடத்திய தாமரை சங்கமம் மாநில மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்த உறு துணையாக இருந்தார்.

சுரேந்திரனுக்கு ஒரு மகள். 2வருடம் முன்பு திருமணம் நடை பெற்றது. ஒரு மகன், பொறியியல் பட்டப் படிப்பை தற்போது தான் முடித்துள்ளான்.

சில மாதங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சென்ற மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார்.

உடல் நலம் மேலும் குறைந்து நேற்று மதியம் சிவப்தம் அடைந்தார்.

இன்று 25.09.19 மதியம் 2மணியளவில் அன்னாரது இறுதி சடங்கு நடைபெறும்.

அவர் ஆன்மா ஈசனடி சேர பிரார்த்திக்கிறேன்.

நன்றி ஓமாம்புலியூர் ஜெயராமன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...