பிடிஆர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி பாஜக புகார் மனு

மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி பாஜக சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவவீரர் லெட்சுமணன். காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு இன்று (ஆக.13) கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் லெட்சுமணன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மலர்வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வுமுடித்து விமான நிலையத்தை விட்டு சென்ற அமைச்சர் கார்மீது அங்கிருந்த பாஜகவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். பெண் ஒருவர் காலணியை எடுத்து அமைச்சர் காரின்மீது வீசினர். அந்தக் காலணி, காரின் முன் கண்ணாடியில் விழுந்தது. சிலர் காரை கைகளால் ஓங்கி தட்டினர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி பாஜக சார்பில் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கபட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக பொருளாளர் ஜி.ராஜ்குமார், மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரைவிமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை மாநகர் தலைவர் சரவணன் ஆகியோரை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மிகவும் மரியாதைக் குறைவாக பேசியுள்ளார்.

அங்கிருந்த அதிகாரிகளிடம், ‘அஞ்சலி செலுத்த இவர்களுக்கு (பாஜக தலைவர்களுக்கு) என்ன தகுதியுள்ளது. இவர்களை யார்விமான நிலையத்துக்குள் விட்டது’ எனக் கேட்டுள்ளார். இதனை விமான நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த பாஜக.,வினர்க்கு தெரியவர அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி சென்ற அமைச்சரின் காரை நிறுத்தி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அமைச்சரின் கார் ஓட்டுநர், பாஜகவினர் மீது காரை ஏற்றுவதுபோல் சென்றுள்ளார். அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்திருந்த போலீஸாரும் பாஜகவினர் மீது தடியடி நடத்தி யுள்ளனர்.

அமைச்சரின் தூண்டுதல்பேரில் திமுகவினரும், போலீஸாரும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாஜகவினர் பலர் காயமடைந் துள்ளனர். இதனால் அமைச்சர் மற்றும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...