மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது உண்டு. துவையல் செய்தும் உண்ணலாம். இருதயத்துக்கு நல்லது. தலையையும், மூளையையும் பற்றிய சூட்டை மாற்றும். ஜீரணம் உண்டாகும். குளிர்ந்த தேகத்தோருக்கு உதவாது. பித்தம் போக்கியாகவும், உடல் பலம், தாது பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.
கொத்துமல்லிக் கீரையுடன் சம அளவு துவரம் பருப்பைச் சேர்த்து பக்குவப்படுத்தி 40 நாட்கள் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவடையும்.
கொத்துமல்லி இலை, சரக்கொன்றை இலை, புளி இவற்றை ஒன்றுகூட்டி தண்ணீர்விட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டை வீக்கம் குணமாகும்.
கொத்துமல்லிக் கீரையை ஆய்ந்து அத்துடன் தேவையான அளவு பச்சை மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்துத் துவையல் அரைத்து அதைக் கடுகு, உளுத்தம் பருப்பு, சேர்த்து நல்லெண்ணெயில் தாளித்து தினசரி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர பித்தம் தணியும்.
தேகத்தில் எங்காவது சுரசுரப்பு காணப்பட்டால் கொத்துமல்லிச்சாற்றை அந்தப் பகுதியில் காலையில் பூசி மாலையில் கழுவி விட வேண்டும். இவ்விதம் 7 நாட்கள் செய்துவர சுரசுரப்பு மாறி தோல் வழுவழுப்பாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.