என்னை வரவேற்றக அதிகளவில்கூடிய தொண்டர்களுக்கு நன்றி. மறக்க முடியாத வரவேற்பாக அமைந்தது. இந்த தருணத்தில், ஒவ்வொரு இந்தியனுக்கும் தலை வணங்குகிறேன்.
2014 தேர்தலுக்கு பின்னரும் அமெரிக்கா சென்றேன். தற்போதும், அமெரிக்காசென்று வந்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் மரியாதை அதிகரித்துள்ளது. இதற்கு 130 கோடி மக்களே காரணம். ஹூஸ்டன் நகரில் மிகச் சிறப்பான நிகழ்ச்சி நடந்தது. அந்தநகரில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், தங்களது ஆதரவினை தெரிவித்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அங்குதான், ஜனநாயகத்தின் வலிமையை அறிந்தேன்.
ஹவ்டி மோடி நிகழ்ச்சி பெரிய திரு விழா போல் நடந்து வெற்றிபெற்றது. இந்த நிகழ்ச்சி, இந்தியா – அமெரிக்கா இடையிலான நட்புறவை வெளிப்படுத்தியது. இந்தகூட்டத்தில், குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் பங்கேற்றனர். வெள்ளை மாளிகை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஐக்கிய நாடுகள் சபையில், உலக தலைவர்களை சந்தித்த போது ஹவ்டி மோடி குறித்து பேசினர். உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. உலகம்முழுவதும் நமது வெற்றி உணரப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர், செப்., 28 ல், நமது தைரியமான ராணுவ வீரர்கள், சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி, உலகளவில் இந்தியாவின் பெருமையை வெளிப் படுத்தினர். இந்த இரவு நேரத்தில், வீரம்தீரம் மிக்க வீரர்களை நினைத்து பார்க்கிறேன். அவர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
7 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, இன்று(செப்., 28) டில்லி திரும்பினார். விமான நிலையத்தில், அவருக்கு பா.ஜ.,வினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். தொண்டர்கள் பாட்டுபாடியும், இசை நிகழ்ச்சி நடத்தியும் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர், விமான நிலையம் அருகே நடந்த வரவேற்புவிழா நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியது:
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |