காந்தி அடிகள் ஒருமனிதனின் ஆற்றல் அவரது தளராத மன உறுதியால் வலுப்படுமே அன்றி அவனது தேகபலத்தால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாய் இருந்தார்.
நமது பிரதமர்தான் இதற்குச் சீரிய எடுத்துக்காட்டு. அவரது ஆன்ம பலம் வியத்தகு செயல்களைச் சாதிக்க ஏதுவாய் உள்ளது.
மேலும் காந்தியடிகள் ஆழ்ந்த மனித நேயம் மிக்கவர். மக்களைப் பெரிதும் நேசித்தார்.
மக்கள் சக்தி மீது அளவற்ற நம்பிக்கை கொண்டார். மக்கள் என்ற மகாசமுத்திரத்தில் ஒரு சில மாசுகள் கலந்தாலும் சமுத்திரம் தூய்மை கெடுவதில்லை. அதனால் அவரது கோட்பாடுகள் சிலருக்கு ஏற்புடைத்தாய் இல்லா நிலையிலும் அனைவரையும் சமமாய் நேசித்தார்.
மோடிஜி யும் இந்நிலைப்பாட்டில் காந்தியின் மறு அவதாரமே. தன் மீது காழ்ப்புணர்வை
உமிழ்ந்து தனது கட்சி வெகுவாகப் புறக்கணித்த தமிழக மக்களையும் தன் சகோதரர்களாய்ப் பாவித்து தமிழக நலனுக்காக பல அரிய திட்டங்கள் ஈந்தவர். தமிழ் மொழியின் மேன்மையை உலகயறியச் செய்கிறார்.
எங்கள் அரசு காந்தி வழியில் அமைதியை நாடுகிறது. யுத்தத்தை விரும்பவில்லை நாங்கள்.
மாறாக புத்தர் வழி செல்லவே விழைகிறோம்.
அனைவரும் கடவுளின் குழந்தைகள், ஹரியின் ஜனங்கள் என்றார் காந்தி. இதனையே விவேகானந்தர் அனைவரும் சகோதரர்களே என ஐக்கிய நாடுகள் சபையில் முழங்கினார்.
மோடிஜியும் தனது அமெரிக்க விஜயத்தில்
இக்கருத்தையே உறுதிபடக் கூறினார்.
வருங்காலம் நிகழ்காலச் சாதனைகளையே சார்ந்தது. எனவே ஆக்கபூர்வமான இந்தியாவை சொல்லாலும் செயலாலும் மெருகேற்ற வேண்டும் என்பதை காந்தியடிகள் வலியுறுத்தினார்
காந்தி அடிகள் அன்று சொன்னார். மோடிஜி அதனை இன்று செய்கிறார். மோடிஜியின் இன்றைய சாதனைகள் நாளைய வலுவான பாரதம் உருவாக ஏதுவாகும். நினைத்ததை நடத்தியே முடிப்பவர்.
இவர் தான் உண்மையான உறுதியான காந்தியவாதி.
காந்தி அடிகளைக் கொன்ற கோட்சே பிஜேபி சார்ந்திருக்கும் ஆர் எஸ் எஸ் காரர். எனவே காந்தியின் மரணத்திற்கு பிஜேபி யும் காரணம் என உளறிக் கொண்டிருக்கிறது ஒரு மடையர்கள் கூட்டம். காந்தியக் கொள்கைகளை அறவே குழி தோண்டி புதைத்தவர்கள் காந்தியம்
பேசுவது பேடித்தனம்.
வாரிசு ஆட்சி, அதிகார போதை, மட்டற்ற லஞ்ச ஊழல், சத்தியப் பாதையை முற்றிலும் புறக்கணித்த பொய்மை, அஹிம்சையை மறந்த வன்முறை தீவிரவாதத்திற்கு துணை நிற்கும் கயமை, என தினந்தினம் காந்தியை கொன்று கொண்டிருப்பவர்கள் எல்லாம் காந்தி ஜெயந்தி கொண்டாட அருகதையற்றவர்கள்.
ஏழை மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், அனைவருக்கும் எரிவாயு,விவசாய மேம்பாடு,
அனைவருக்கும் வங்கிக் கணக்கு,வரி செலுத்தும் முறையான வர்த்தகம்,கருப்பு பணப் புழக்கம் அறவே நீக்கம்,அனைவருக்கும் சுகாதார வசதி கொண்ட கழிப்பறைகள், சுற்றுப்புறத் தூய்மை
என கிராமப்புற மக்கள் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்கள்.
கிராமங்களே இந்தியாவின் உயிர் நாடி கிராம மேம்பாடே வலுவான இந்தியாவின் அடிப்படை என்று சொன்னார் காந்தி. அதனை வெற்றியுடன் செயற்படுத்துகிறது பிஜேபி அரசு.
ஒருங்கிணைந்த கிராமங்கள்,வலுவான இந்தியா, உறுதியான எதிர்காலம், ஏழைகளின் சிரிப்பு, …. அனைத்தும் பிஜேபி ஆட்சியில் மகிழ்ச்சியோடும், மிகுந்த பெருமிதத்துடனும் காந்தி ஜெயந்தியைக்
கொண்டாடுகிறோம்.
அருகதையற்றவர்கள் ஒதுங்கி நில்லுங்கள்.
காந்தி ஜெயந்தி அன்றே அவர்போற்றிய சத்திய நெறிகளை மறந்து பொய்யுரைகள் பேசினால்
காந்திைஅடிகளின் ஆன்மாகூட உங்களை மன்னிக்காது.
வாழ்க பாரதம்
வாழ்க தேசப்பிதாவின் புகழ். வந்தே மாதரம்.
ஜெய்ஹிந்த்.
நயினார் நாகேந்திரன்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |