தமிழர்கள் மீது மோடியின் அளவற்ற அன்பு – கிஷன் ரெட்டி

பிரதமர் மோடி தமிழர்கள் மீது அளவற்ற அன்பு வைத்துள்ளார் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

மதுரை மேலுார் பகுதி டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக அப்பகுதி மக்கள் நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்ற கிஷன் ரெட்டி பேசியதாவது:

பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் ஏராளமான அன்பை தெரிவித்துள்ளனர். தமிழர்களின் பெருமை, பாரம்பரியம், பண்பாட்டை உலகம் முழுவதும் மோடி கொண்டு செல்கிறார். தமிழர்கள் மீது தனிப்பட்ட முறையில் பற்றுக் கொண்டு செங்கோலை பார்லிமென்ட்டில் நிறுவி பெருமை சேர்த்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு பிரச்னை வந்து போது அதை மீட்டு தந்தவர் பிரதமர் மோடி. தமிழ் பண்பாட்டை காப்பதற்காக அனைத்து பணிகளையும் செய்து வருகிறார் மோடி. தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிர தமிழ் சங்கமம் நடத்தி காட்டியவர். இது குஜராத்திற்கும் தமிழகத்திற்கும் பண்பாட்டு சின்னமாக திகழ்ந்தது. தமிழக மீனவர்கள் இலங்கையில் சிக்கலுக்கு ஆளாகும்போது அவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் தந்தவர் மோடி.

தமிழக மக்கள் தேசியத்தையும் மோடியையும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ் மொழியை வியாபாரமாக பயன்பட� ...

தமிழ் மொழியை வியாபாரமாக பயன்படுத்தும் திமுக தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தி.மு.க., ...

அமித்ஷாவுக்கு பாஜக தலைவர் நன்ற� ...

அமித்ஷாவுக்கு பாஜக தலைவர் நன்றி தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று முன்தினம் பா.ஜ., ...

140 கோடி மக்களின் நம்பிக்கை – பி� ...

140 கோடி மக்களின் நம்பிக்கை – பிரதமர் மோடி பெருமிதம் 'மஹா கும்பமேளா நிகழ்ச்சி நிறைவடைந்தது. 140 கோடி இந்தியர்கள் ...

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டத்தில் ...

தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஸ்டா ...

தொகுதி மறுசீரமைப்பு பற்றி  ஸ்டாலின் சொல்வது பொய் – அமித்ஷா குற்றச்சாட்டு 'லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் ...

2026-ல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப� ...

2026-ல் திமுகவை வீட்டுக்கு அனுப்புவது உறுதி – அண்ணாமலை 'தமிழகத்தில் நீங்கள் என்ன குட்டிக்கரணம் போட்டாலும், 2026ல் நீங்க ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...