” இலங்கையில் இருந்து திரும்பும் வழியில் ராமர் பாலத்தை தரிசிக்கும் ஆசி கிடைத்தது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இலங்கை சென்ற பிரதமர் மோடி, அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்தார். ஹெலிகாப்டரில் வரும் போது ராமர் பாலத்தை தரிசனம் செய்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், அத்துடன் பதிவில் கூறியுள்ளதாவது: இலங்கையில் இருந்து திரும்பும் வழியில் ராமர் பாலத்தை ஹெலிகாப்டரில் இருந்து தரிசனம் செய்யும் ஆசி கிடைத்தது. அயோத்தியில் சூரிய திலகம் நடந்த அதே வேலையில் தற்செயலாக ராமர் பாலத்தை தரிசித்தேன்.
இரு தரிசனத்தையும் பெறுவது பாக்கியம். நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக கடவுள் ஸ்ரீராமர் உள்ளார். அவரது ஆசிர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்து இருக்கட்டும். இவ்வாறு அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |