மாமல்லபுரத்தில் இந்தியா, சீனா ஆட்சியாளர்கள் மத்தியிலான அதிகார பூர்வமற்ற 3 நாள் தொடர் பேச்சுவார்த்தை தமிழகத்துக்கு பெருமை, பிரதமர் நரேந்திர மோடியின் ராஜ தந்திரத்துக்கு பெரும் வெற்றி, ஆம் தொடங்குவதற்கு முன்பே பெரும் வெற்றி என்றுதான் கூறவேண்டும்.
இந்தியா சீனா தொடர்பு பல்லாயிரம் ஆண்டுகளை கடந்தது. பேரரசர் வான் (கி.மு 140 – 86) காலமாகட்டும், கி.பி. 6-ம் நூற்றாண்டு தொடங்கி, 13-ம் நூற்றாண்டு வரை காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர்கள் காலமாகட்டும் நீண்ட நெடியது. முத்து, பவளம், பட்டு வணிகம் பல நூற்றாண்டுகள் செழித்தோங்கியது. சீன வரலாற்று ஆசிரியர் மா-டவான் லி , சீன பயணி யுவன் சுவாங், மற்றும் மாமல்ல புறத்தின் குறிப்புகளில் இருந்து இதை நாம் அறியலாம்.
இந்தியாவில் பிறந்த புத்தம் சீனாவில் செழித்தோங்கியது, தமிழகத்தில் பிறந்த பல்லவ அரச வம்சத்தை சேர்ந்த போதிதர்மன் அதை அங்கு மேலும் வேறூன்ற செய்தான். எனவே பாரதத்தின் பண்பாடும், கலாச்சாரமும் அவர்களுக்கு வெறுக்க தக்கதல்லவே. இந்திய, சீனா வெறுப்பு அரசியல் என்பது வெறும் 70வது வருடத்தையதே. இரு நாடுகளிடையேயான 1962 போரும், பாக்கிஸ்தான் மீதான கண்மூடி தனமான ஆதரவுமே வெறுப்பை தீவிரமாக விதைத்தது. அதுவும் காங்கிரஸ் அரசுகளின் ராஜதந்திர தோல்வியும், திறமையின்மையுமே இதை உயிர்ப்புடன் வைத்திருந்தது.
தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் நேர்மறையான அணுகு முறையும், தேவைப்படும் இடங்களில் கடும் பதிலடியும், பரஸ்பர நம்பத்தன்மையும், ராஜதந்திர வியூகமும் பலனளிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு சிக்கிமின் டோக்லாமில் இந்திய, சீன ராணுவம் நேருக்கு நேர் மல்லுக்கட்டின, இந்திய பின்வாங்க வேண்டும், வீண் வம்பை சீனாவிடம் விலைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்க வேண்டாம் என்றது இங்குள்ள பெரும்பாலான ஊடகங்களும், எதிர் காட்சிகலும். ஆனால் 73 நாள் மல்லுக்கட்டு சீனாவின் வாகன் நகரில் இரு நாடுகளிடையேயான முதல் முறைசாரா சந்திப்புக்கு பின் முற்றுப் பெற்றது. . சீனா பின்வாங்கி கொண்டது. இது முதல் வெற்றி.
தற்போது 2வது முறைசாரா சந்திப்பு தொடங்குவதற்கு முன்பே வெற்றியை எட்டிவிட்டது. காஸ்மீரின் 370 சிறப்பு சட்டத்தை இந்திய ரத்து செய்த பொழுது அதை கடுமையாக எதிர்த்த சீனா, பாகிஸ்தானுடன் இனைந்து மூன்றாம் உலக நாடுகளின் தலையீட்டினை வலியுறுத்திய சீன, ஐயக்கிய நாடுகளின் பொதுச்சபையின் தலையீட்டை வலியுறுத்திய சீனா, தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஐநாவின் பூட்டிய அறையினுள் விவாதம் நடத்திய சீனா, இன்று இந்த விஷயத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மட்டுமே பேசி தீர்வு காண வேண்டும் என்று கூறிவிட்டு பின் வாங்கியுள்ளது.
இது மாபெரும் வெற்றிதானே, இந்தியாவும் சீனாவும் இனி வரும் காலங்களிலும் எதிரியாகவே இருக்க வேண்டும் என்ற விதியொன்றும் இல்லையே!.
நன்றி தமிழ்த்தாமரை VM வெங்கடேஷ்
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
3lustful