இங்கிலாந்து தலை நகர் பர்மிங்ஹாமில் இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டியில், லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவை எதிர் கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணியை 17 – 10 என்ற புள்ளிகணக்கில் இந்திய அணி வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், தங்கப் பதக்கம் வென்ற மகளிருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ளவர், பர்மிங்ஹாமில் வரலாற்று வெற்றி. செளபே, பிங்கி சிங், நயான்மோனி சைகா மற்றும் ரூபா ராணி ஆகியோர் லான் பவுல்ஸ் விளையாட்டில் மதிப்புமிக்க தங்கப்பதக்கத்தைப் பெற்றுத்தந்துள்ளனர்.
மகளிர் அணி தங்களது திறமையை நிரூபித்துள்ளது. அவர்களுடைய இந்த வெற்றி ஏராளமான இந்தியர்களை லான்பவுல்ஸை நோக்கி நகர ஊக்கப்படுத்தும் என இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி பிரதமர் பாராட்டு நரேந்திர மோடி நரேந்திர மோடி காமன்வெல்த் போட்டி குறிப்பிட்டுள்ளார்.
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |