காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அழித்ததால் தான், அங்கு பயங்கரவாதம் அதிகரித்தது. சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்வதற்கு, சர்தார் படேல் தான், எனக்கு துாண்டுதலாக இருந்தார். ”இந்த அதிரடியான நடவடிக்கையை, சர்தார் படேலுக்கு சமர்ப்பிக்கிறேன்,”
இதன் மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட மாநில அந்தஸ்து முடிவுக்கு வந்துள்ளது.
இரண்டு புதியயூனியன் பிரதேசங்கள் உருவாகியுள்ளன. ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான எல்லையை வரையறுப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை; புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான இணைப்புமுயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் உணர்வு, பொருளாதாராம், அரசியல் அமைப்பு ஒருமைப்பாடு ஆகியவற்றுக்காக, பா.ஜ., அரசு கடுமையாக பணியாற்றிவருகிறது.
இது போன்ற விஷயங்களை மேற்கொள்ளாமல், நம் நாட்டை, 21ம் நுாற்றாண்டின் வலிமையான நாடாக மாற்ற முடியாது. நம்முடன் போரில் வெல்ல முடியாதவர்கள், நம் ஒருமைப்பாட்டை சிதைத்து, நம்மை வெற்றிகாண முயற்சிக்கின்றனர். அவர்களால், இந்த முயற்சியில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது.
ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தால், அந்த மாநிலத்தில் பயங்கர வாதமும், பிரிவினை வாதமும் தான் அதிகரித்தது. கடந்த, 30 ஆண்டுகளாக, நம் நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களால், 40 ஆயிரம்பேர் உயிரிழந்து விட்டனர்.
இதுபோன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே, காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்டது. இந்த விஷயத்தில், எனக்கு துாண்டுகோலாக அமைந்தது, சர்தார் படேலின் நடவடிக்கைகள்தான். இந்த அதிரடியான நடவடிக்கையை, சர்தார் படேலின் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமை அடைகிறேன்.
வட கிழக்கு மாநிலங்களில், தற்போது பிரிவினை வாதம் பேசுவது குறைந்துள்ளது. பிரச்னைக்கு தீர்வுகாண்பதை நோக்கி, அந்த மாநிலங்கள் பயணிக்க துவங்கியுள்ளன. அங்கு அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க, பல்வேறு சக்திகள், நுாற்றாண்டுகளாக முயற்சித்தும், அவர்களுக்கு தோல்வியே கிடைக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான், நம் பலம். இந்த ஒருவிஷயத்தில், மற்ற நாடுகள் நம்மை பார்த்து ஆச்சரியப் படுகின்றன.
நுாறு ஆண்டுகளுக்கு முன், சந்திரகுப்த மவுரிய மன்னரின் ஆலோசகராக விளங்கிய சாணக்கியரால், நம்நாடு ஒருங்கிணைந்தது. அதற்குபின், சர்தார் படேல், நாட்டை ஒருங்கிணைத்தார்.மதம், மொழி, இன வேறுபாட்டை கடந்து, நாம் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும். அது தான், நமக்கான பலம்.
நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும், மாகாணங்களை இணைப்பதில் பெரும் பங்காற்றிய வருமான, சர்தார் படேலின் பிறந்த நாள், நாடுமுழுவதும், தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப் படுகிறது.
அவரது, 144வது பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டம், கேவடியாவில் அமைந்துள்ள, அவரது பிரமாண்ட சிலைக்கு, பிரதமர் நரேந்திரமோடி, நேற்று, மலரஞ்சலி செலுத்தினார்.இதன்பின், அங்கு திரண்டிருந்த மாணவர்கள், பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மத்தியில், ஒருமைப்பாட்டு உறுதிமொழியையும் எடுத்து பிரதமர். பேசியது.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |