ஜம்மு – காஷ்மீரின் வளர்ச்சி பயணத்தை வலுப்படுத்துவோம்

அரசியல் சட்டப்பிரிவு, 370 மற்றும், 35 (ஏ) ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதன் வாயிலாக, ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படும், நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நீதிமன்றம் நிலைநாட்டியுள்ளது. 2019 ஆகஸ்ட் 5ல் மேற்கொள்ளப்பட்ட முடிவு, ஒருமைப்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கமுடையதே அன்றி, ஒருமைப்பாட்டை சிதைக்கும் நோக்கம் கொண்டதல்ல என்றும், உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. மேலும், 370-வது பிரிவு, நிரந்தரதன்மை உடையதல்ல என்ற உண்மையையும் அங்கீகரித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் பல ஆண்டுகளாக நடந்தது, நம் தேசத்திற்கும், அங்கு வாழும் மக்களுக்கும், மிகப்பெரிய துரோகம் என்பது, என் அசைக்க முடியாத நம்பிக்கை. மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை அகற்ற, அவர்களின் துயரங்களை போக்க, என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பது, என் விருப்பமாக இருந்தது.

பிரிவுகள், 370, 35 (ஏ) என்ற சொற்கள், அதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தன. இந்தியாவில் உள்ள மற்ற குடிமக்கள் பெறும் உரிமைகளையும், வளர்ச்சியையும், ஜம்மு – காஷ்மீர் மக்கள் பெறமுடியாத நிலையை அந்தப் பிரிவுகள் ஏற்படுத்தின. இதன் காரணமாக, ஒரே தேசத்தின் மக்களிடையே பாகுபாடுகள் நிலவின.

கடந்த, 2014ல், நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த சிறிது காலத்திலேயே, ஜம்மு – காஷ்மீரை தாக்கிய பெருவெள்ளம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடுமையான சேதத்தை விளைவித்தது. 2014 செப்டம்பரில் நிலைமையை மதிப்பீடு செய்ய, நான் ஸ்ரீநகர் சென்ற போது, பலதரப்பு மக்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன்.

 

அவர்களுடனான கலந்துரையாடலின் போது, ஜம்மு – காஷ்மீர் மக்கள், வளர்ச்சியை மட்டும் விரும்பவில்லை; பல பத்தாண்டுகளாக பரவலாக நிலவுகின்ற ஊழலில் இருந்தும், வன்முறைகளில் இருந்தும் மாநிலம் விடுபட வேண்டும் என்று விரும்புவதை அறிந்தேன்.

ஜம்மு – காஷ்மீரின் வளர்ச்சி பயணத்தை மேலும் வலுப்படுத்த, எங்கள் அரசின் அமைச்சர்கள் அங்கு தொடர்ந்து பயணம் மேற்கொள்வது என்று முடிவெடுத்தோம். இந்த பயணங்களும், ஜம்மு – காஷ்மீரில் நல்லெண்ணத்தை கட்டமைப்பதில், முக்கிய பங்கு வகித்தன. பின், ஜம்மு – காஷ்மீரின் வளர்ச்சி தேவைகளை நிறைவேற்றும் முக்கிய நடவடிக்கையாக, 2015-ல் சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இது, அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, வேலை உருவாக்கம், சுற்றுலா மேம்பாடு, கைவினை தொழில் துறைக்கு ஆதரவு என்ற முன்முயற்சியை கொண்டிருந்தது.

ஜம்மு – காஷ்மீரில், விளையாட்டு திறனின் வலிமையை, நாங்கள் பயன்படுத்தி கொள்ள முடிவெடுத்தோம். ஏனென்றால், இளைஞர்களின் கனவுகளை துாண்டுவதற்கான ஆற்றல், அதிலிருப்பதை நாங்கள் உணர்ந்தோம். விளையாட்டு தளங்கள், பயிற்சி திட்டங்கள் மேம்படுத்தப்பட்டன. பயிற்சியாளர்கள் கிடைக்க வகை செய்யப்பட்டது.

அத்துடன், உள்ளூர் கால்பந்து மன்றங்கள் அமைப்பதை ஊக்குவித்தது மிகவும் தனித்துவமானது. இதன் விளைவும் அசாதாரணமானது. திறமைமிக்க கால்பந்து வீராங்கனை, அக்ப்ஷன் ஆஷிக் பெயர் என் நினைவுக்கு வருகிறது. 2014 டிசம்பரில், இவர் ஸ்ரீ நகரில் கல்லெறியும் கும்பலில் ஒருவராக இருந்தார். சரியான ஊக்குவிப்பு காரணமாக, கால்பந்து விளையாட்டில் கவனத்தை திருப்பினார்.

பயிற்சிக்கு அனுப்பப்பட்ட இவர், அந்த விளையாட்டில் அதீத திறமை பெற்றார். மற்ற சில இளைஞர்களும் குத்துச்சண்டை, கராத்தே உள்ளிட்டவற்றில் மிளிரத் துவங்கினர்.

இதன்பின், மத்திய அரசிலிருந்து வெளியேறினாலும், ஜம்மு – காஷ்மீர் மக்களின் விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கோட்பாட்டை உறுதியாக பின்பற்றுவது என, தீர்மானித்தோம். பஞ்சாயத்து தேர்தல்களின் வெற்றி, ஜம்மு – காஷ்மீர் மக்களின் ஜனநாயக தன்மையை வெளிப்படுத்தியது.

 

ஊராட்சி தலைவர்களுடன் நான் கலந்துரையாடியது என் நினைவுக்கு வருகிறது. அப்போது, எந்த இடத்திலும் பள்ளிகள் எரிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, அவர்கள் நான் முன் வைத்தேன். இது, ஏற்றுக் கொள்ளப்பட்டது. பள்ளிகள் எரிக்கப்பட்டால் பாதிக்கப்படுவது சிறு குழந்தைகள் தான்.

வரலாற்று சிறப்புமிக்க, 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி, இந்தியர் ஒவ்வொருவர் மனதிலும் பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது. சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த முடிவை, நம் பார்லிமென்ட் நிறைவேற்றியது.

அதிலிருந்து, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கில் பல வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு, 2023 டிசம்பரில் தான் வந்துள்ளது.

அதற்கு முன், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள், பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் அணிவகுப்பை கண்டுள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன், சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (ஏ)வை ரத்து செய்யும் முடிவை, பார்லிமென்ட் எடுத்த போது, அது மக்கள் மன்றத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

கடந்த நான்கு ஆண்டுகளில், அரசியல் நிலைப்பாட்டில் ஜனநாயகத்தின் வேர்களில், ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கான பலன்களை பெறவில்லை. அதே போல, லடாக் மக்களின் விருப்பங்களும் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டன.

 

இவை அனைத்தையும், 2019- ஆகஸ்ட் 5-ம் தேதி மாற்றியது. அனைத்து மத்திய சட்டங்களும், இப்போது எந்தவித தயக்கமும், பாரபட்சமும் இன்றி அமல்படுத்தப்படுகின்றன; பிரதிநிதித்துவமும் பரவலாக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் முறை அமலில் இருக்கிறது. வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

மத்திய அரசின் முக்கியமான திட்டங்கள், கிட்டத்தட்ட முழுமையடையும் கட்டத்தில் உள்ளதால். சமூகத்தின் அனைத்துப்பிரிவு மக்களும் இவற்றால் பயன் அடைந்துள்ளனர். இவற்றில் கிராமங்களில், 100 சதவீத மின்வசதியை உறுதி செய்யும் சவுபாக்யா, இலவச சமையல் எரிவாயு இணைப்பை வழங்கும் உஜ்வாலா மற்றும் எல்.இ.டி., மின்விளக்குகளை சலுகை விலையில் வழங்கும், உஜாலா திட்டங்கள் அடங்கும்.

வீட்டு வசதி திட்டங்கள், குழாய் மூலம் குடிநீர் இணைப்பு, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டது. மக்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்த சுகாதார வசதிக்கான அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து கிராமங்களும், திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை அடைந்தன.

அரசு பணியிடங்களை நிரப்புவதில், ஊழலும் ஒரு தலைப்பட்சமும் இருந்த நிலை மாறியது. வெளிப்படைத்தன்மையோடு, முறையான நடைமுறைகளோடு பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

சிசு இறப்பு விகிதம் போன்ற இதர விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அனைவருக்கும் கண்கூடானது. இதற்கான பெருமை இயல்பாகவே, ஜம்மு – காஷ்மீர் மக்களின் மனஉறுதிக்கு உரியது.

இங்குள்ள மக்கள் வளர்ச்சியை மட்டுமே விரும்புகின்றனர் என்பதையும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தின் சக்திகளாக இருக்கவே விரும்புகின்றனர் என்பதையும், மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர், லடாக் ஆகியவற்றின் அந்தஸ்து, ஒரு கேள்விக்குறியாக இருந்தது. இப்போது வளர்ச்சி, முன்னேற்றம் சுற்றுலா பயணியர் வருகை ஆகியவற்றில், வியத்தகு சாதனை நிகழ்ந்துள்ளது.

 

உச்சநீதிமன்றத்தின் டிசம்பர், 11ம் தேதி தீர்ப்பு, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வை வலுப்படுத்தியுள்ளது. ஒற்றுமையின் பிணைப்புகள், நல்லாட்சிக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு போன்றவற்றை இது வரையறுத்துள்ளது.

இப்போது, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், ஓவியம் தீட்டுவதற்கான துாய்மையான சித்திர துணியை போல பிறக்கின்றன. அப்படிப் பிறக்கும் ஆண் அல்லது பெண் குழந்தைகள் தான், தங்களின் துடிப்பான எதிர்கால விருப்பங்களை அதில் வண்ண ஓவியங்களாக தீட்ட இயலும்.

இப்போது மக்களின் கனவுகள், கடந்த காலத்தின் சிறைகளாக இல்லாமல், எதிர்காலத்தின் சாத்தியங்களாக இருக்கின்றன. அனைத்துக்கும் மேலாக அதிருப்தி, ஏமாற்றம், விரக்தி போன்றவற்றுக்கு மாற்றாக வளர்ச்சி, ஜனநாயகம், கண்ணியம் போன்றவை இடம் பெற்றுள்ளன.

ஒரே பாரதம், உன்னத பாரதத்திற்கு வலுசேர்த்த தீர்ப்பு

நன்றி பிரதமர் நரேந்திர மோடி 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா உறுதி ஜம்மு, ''சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு - காஷ்மீருக்கு ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களி ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் -குடியரசுத்துணைத்தலைவர் நமது வாழ்வில் குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...