கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை நிறுவியது ரானடேயே

கன்னியாகுமரில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைய மூல காரணம் யார் தெரியுமா? திக-வும் இல்லை; திமுக-வும் இல்லை.

கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? கருணாநிதிக்கா, வீரமணிக்கா…. இல்லை.

ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்கான ஏக்நாத் ரானடே என்கிற மகத்தான கர்மயோகிக்குதான்.

கன்னியாகுமரியில் இருந்த இரண்டு பாறைகளையும் அன்று சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் ஏக்நாத் ரானடே தலைமையில் இயங்கிய விவேகானந்தா நினைவு மண்டப கமிட்டி மற்றும் விவேகானந்தா கேந்திரத்திடம் ஒப்படைத்திருந்தது தமிழக அரசு.

சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின் பக்கத்தில் இருந்த மற்றொரு பாறையை 17-7-1977ல் தமிழக அரசாங்கத்திடமே ஒப்படைத்தது விவேகானந்தா கேந்திரம்.

ஒப்படைத்த து மட்டுமல்லாமல், 15-3-1979ல் தமிழக அரசாங்கத்திற்கு திருப்பி அளிக்கப்பட்ட அந்த பாறையில் சுவாமி திருவள்ளுவருக்கு நினைவாலயம் மற்றும் திருவள்ளுவருக்கு சிலை எழுப்ப வேண்டும் என்கிற திட்டத்தை அனுப்பியது விவேகானந்தா கேந்திரம். அனுப்ப ஏற்பாடு செய்தவர் ஏக்நாத் ரானடே அவர்கள்.

அதன் காரணமாக தமிழக அரசாங்கமும் அதை ஏற்றுக் கொண்டு திருவள்ளுவர் நினைவாலயத்திற்கான அடிக்கல்லை அப்போதைய முதல்வராக இருந்த திரு.எம்ஜிஆர் அவர்களாலும் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல்லை அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களாலும் 15-4-1979ல் கன்னியாகுமரில் நாட்டப்பட்டது.

ஆக, கன்னியாகுமரில் திருவள்ளுவருக்கு இன்று கம்பீரமாக சிலை இருக்கிறது என்று சொன்னால் அதற்கு முழு முதல் காரணம் ஆர்எஸ்எஸ் பிரச்சாரக் ஏக்நாத் ரானடே அவர்கள்தான். இந்து அமைப்புதான் காரணம்.

நன்றி மா.வெங்கடேசன் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...