ஏக்நாத் ஷணடே எந்த இலாக்காவும் கேட்கவில்லை – முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ்

ஏக்நாத் ஷிண்டே எந்த இலாக்காவும் கேட்கவில்லை. டிசம்பர் 16ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்’ என மஹா., முதல்வர் பட்னவிஸ் தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவின் முதல்வராக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் நேற்று பதவியேற்றார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்.,கின் அஜித் பவார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு இன்று (டிச.,06) அளித்த பேட்டி:

பா.ஜ.,வை சேர்ந்தவர் தான் முதல்வர் என்பதை முதல் சந்திப்பிலேயே ஏக்நாத் ஷிண்டே ஏற்றுக்கொண்டார். சிவசேனா கட்சி தலைவர்கள் சிலர் தங்கள் கட்சியில் இருந்து முதல்வர் வர வேண்டும் என விரும்பினர். நாங்கள் பா.ஜ.,வை சேர்ந்தவர் தான் முதல்வர் என்பதில் திட்டவட்டமாக இருந்தோம். தனிப்பட்ட முறையில் ஷிண்டேவுடன் எனக்கு நல்லுறவு உள்ளது. ஏக்நாத் ஷிண்டே எந்த இலாக்காவும் கேட்கவில்லை. டிசம்பர் 16ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்.

உள்துறை எப்பொழுதும் பா.ஜ., வசம் தான் இருக்கும். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நாங்கள் ஒருமித்த கருத்தை எட்டி உள்ளோம். பிரிவினைவாத அரசியலை மக்கள் நிராகரித்தனர். இலவச மின்சாரம், கல்வி போன்ற நல்ல திட்டங்களால் மஹாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்தது. இது தான் பா.ஜ., மிகப்பெரிய கட்சியாக உருவானதற்கு காரணம். முழு மனதுடன் மக்கள் என்னை ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...