‘யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் பெருமையை பரப்பும் பிரதமரின் பணியில் மற்றொரு மைல்கல்’ என, கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, இந்தியாவின் உதவியுடன், யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாசார மையம் கட்டப்பட்டது.
இதற்கு, ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என மறு பெயரிட்டிருப்பது, உலகம் முழுதும் பழம்பெரும் வாழும் மொழி மற்றும் கலாசாரமான, தமிழின் பெருமையை பரப்புவதற்கான, பிரதமரின் தொடர்ச்சியான பணியில் மற்றொரு மைல் கல்லாகும்.
இது, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான கலாசாரம் மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |