அயோத்தி அறக் கட்டளை பாஜக உறுப்பினர் யாரும் இடம்பெற மாட்டார்கள்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் அறக் கட்டளையில் பாஜக உறுப்பினர் யாரும் இடம்பெற மாட்டார்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர்கோயில் கட்டுவதற்கும், அதற்குபதிலாக வேறொரு பகுதில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்குவதற்கும் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷா, ஜார்கண்ட் தேர்தல்பிரச்சாரத்தில் பேசுகையில், அயோத்தியில் இன்னும் 4 மாதத்திற்குள் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அமைக்கப்படும் ராமர்கோயில் அறக்கட்டளையில் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று தகவல்கள் வெளியாகின. இதை அமித்ஷா மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக, தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்தபேட்டியில், இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ராமர்கோயில் அறக்கட்டளையில் பாஜகவைச் சேர்ந்த எவருமே இடம்பெற மாட்டார்கள். அதே போல், ராமர் கோயில் அறக்கட்டளைக்கு அரசு நிதி எதுவும் ஒதுக்கப் படாது. அந்த அறக்கட்டளையே மக்களிடம் நன்கொடைகளை பெற்று கோயிலைகட்டும் என்று கூறியுள்ளார்.

One response to “அயோத்தி அறக் கட்டளை பாஜக உறுப்பினர் யாரும் இடம்பெற மாட்டார்கள்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...