உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அயோத்தியில் சரயுநதிக்கரையில் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் ராமர் குழந்தை வடிவில்காட்சி அளிக்கிறார். கடந்த மாதம் 22 ஆம் தேதி பிரதமர் மோடி ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்துவைத்தார். ராமர் கோயில் திறக்கப்பட்ட அடுத்த நாள் முதலே பக்தர்கள் அயோத்தியில் குவிந்து வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ராமபக்தர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகைபுரிந்து வருகின்றனர். காணிக்கையையும் தாராளமாக வாரி வழங்கி வருகின்றனர். அயோத்தியில் பக்தர்களின் வசதிக்காக சமீபத்தில்தான் உத்தரப்பிரதேச அரசு விமான நிலையம் திறந்தது. தொடர்ந்து, டெல்லி, சென்னை, பெங்களூரு என பலநகரங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட்டது.
அயோத்தி நகரில் பக்தர்களின் வசதிக்காக தங்கும் இடம், உணவகங்கள் என பல்வேறு மேம்பாட்டுபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசு, அயோத்திக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்புரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து இன்று முதல் அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது சமூக லைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்திலிருந்து, அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் செல்லும் பக்தர்களுக்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திலிருந்து 34 சிறப்புரயில்களை இயக்குகிறது என தெரிவித்துள்ளார். இந்த ரயில்கள், கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்குச் செல்லவிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் இருந்து அயோத்தி ஶ்ரீராமர் கோவிலில் தரிசனம்செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் பதிவுசெய்துள்ளனர் என்றும் அவர்களின் பயணக் கட்டணம், உணவு, தங்குமிடம் மற்றும் தரிசனக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |