கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ரிலையன்ஸ் மிகபயனுள்ள பங்களிப்பைச் செய்துவருகிறது என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடுமுழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவர்களுக்கு சிகிச்சை யளிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன. அதனால், ரிலையன்ஸ் நிறுவனம் சார்பிலும் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவமனை கட்டப்படுகிறது. மேலும், வென்டி லேட்டர்கள், முகக்கவசம் உற்பத்திசெய்யப்படும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம்சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, பிரதமர் நிவாரண நிதிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் 500 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில், ‘கொரோனாவுக்கு எதிரானப் போராட்டத்தில் ஒட்டு மொத்த ரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. மருத்துவ முகாம் அமைப்பதாக இருந்தாலும், மக்களுக்கு ஒதுக்குவதாக இருந்தாலும் அவர்கள் சிறப்பாக செயல் படுகின்றனர். கொரோனா வைரஸுக்கு எதிராக அவர்களுடைய பிறசெயல்பாடுகளுக்கும், பிரதமர் நிவாரண நிதிக்கு அவர்கள் நிதியளித்ததற்கும் முகேஷ் அம்பானிக்கும், நீடா அம்பானிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.