இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை செய்யும். இதன் குணம் இதன் வேரினால் வசிய முண்டாகும். இலை – இரத்தமூலம், அதிசாரம், கபநோய், வியர்வை, தந்திப் பிரமேகம் இவைகளைப் போக்கும். அரிசி என்கிற இதன்விதை பசியைப் போக்கும் சமூல சாம்பல் பிரசிவித்த மாதர் உதிரசிக்கலை ஒழிக்கும். வங்கத்தைச் செந்தூரமாக்கும்.
செந்நாயுருவி இதனால், வீக்கம், பாண்டு, காமாலை, இவை நீங்கும். மாதர்களின் ருதுகாலத்தில் மாதர்களின் சோணிதத்தை வழக்கப்படி உண்டாக்கும்.
இலைக் கற்பமும், வெல்லமும் சேர்த்து அல்லது இலையுடன் மிளகு, பூண்டு சேர்த்தரைத்துச் சுரத்துக்குக் கொடுக்கலாம். இலையை நீர் விட்டரைத்துச் சிறுகடி விடங்களுக்குப் பூசலாம். இலைச்சாற்றை வெய்யிலில் வைத்து வற்றவைத்து மெழுகு பதமாக்கி அத்துடன் சிறிது அபின் சேர்த்துக் கொறுக்கு புண்ணிற்குப் போடச் சுகமாகும்.
நாயுருவி சாம்பல் தெளிநீர் 41/2 லிட்டர் நாயுருவி சாம்பல் ¼ லிட்டர் நல்லெண்ணெய் 1 ½ லிட்டர் இவைகளைச் சேர்த்துக் காய்ச்சிப் பக்குவத்தில் வடித்துக் கொள்ளவும் இத்தைலத்தை, காது செவிடு, காதுசீழ் முதலியவைகளை நீக்கும்.
வேர்ச்சாம்பல் 5 குன்றியிடை வெல்லத்தில் கொடுக்கச் சுகப் பிரசவமுண்டாகும். பச்சை வேரால் பல்துலக்கு வர பல் அழுக்குகள் நீங்கி முகவசீகர முண்டாகும். புண்களை அறுத்துக் குணப்படுத்த இதன் சாம்பல் ஊன் பூச்சுத் தைலத்தில் சேரும்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.