தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில், ஆயுதப்படை, விண்வெளி, பாதுகாப்புததுறைகளின் பல்வேறு தேவைகளுக்காக தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித்திட்டத்தின் கீழ், தனியார் துறைக்கு 7 புதிய திட்டங்களை செயல்படுத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில், தொழில்துறையினரைக் குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இத்திட்டங்கள், ராணுவத் தளவாடத் தொழில்துறையை வலுப்படுத்தும்.
இதில் ரேடார் சமிக்ஞை முறை தயாரிப்புத்திட்டத்திற்கு சென்னையில் டேட்டா பேட்டர்ன் (இந்தியா) நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் நொய்டாவில் உள்ள ஆக்ஸிஜன்-2 இன்னோவேஷன் தனியார் நிறுவனம், புனேயில் உள்ள சாகர் பாதுகாப்பு பொறியியல் தனியார் நிறுவனம், கொச்சியில் உள்ள ஐஆர்ஓவி தொழில்நுட்பத் தனியார் நிறுவனம், பெங்களூருவில் உள்ள கிராஃப்ட்லாஜிக் ஆய்வகத் தனியார் நிறுவனம், அக்கார்ட் மென்பொருள் தனியார் நிறுவனம், கோயம்புத்தூரில் உள்ள அலோஹாடெக் தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |