அவசரச் சட்டம் மருத்துவப் பணியாளா்களை பாதுகாக்கும்

கரோனா நோய்த் தொற்று சூழலில் வன்முறையில் இருந்து மருத்துவப் பணியாளா்களை பாதுகாப்பதற்காக கொண்டுவரப் பட்டுள்ள அவசரச்சட்டம், அவா்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

இதுகுறித்து சுட்டுரையில் அவா் புதன்கிழமை வெளியிட்டபதிவில், ‘மருத்துவப் பணியாளா்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்டுள்ள அவசரச் சட்டமானது, கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் முன்னின்று செயல்படும் ஒவ்வொரு மருத்துவப் பணியாளா்களையும் பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளதை எடுத்து கூறும். இந்த அவசரச்சட்டம் மருத்துவ பணியாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும். அவா்களுக்கான பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை’ என்று கூறியுள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று தடுப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளா்கள் தாக்குதலுக் குள்ளாகும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்ததை அடுத்து, அவா்களை பாதுகாப்பதற்கான அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதன்படி, மருத்துவ பணியாளா்களை தாக்குவோருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆச்சார்ய லக்ஷ்மிகாந்த் தீக்ஷி ...

ஆச்சார்ய லக்ஷ்மிகாந்த் தீக்ஷித் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் காசி விஸ்வநாதர் தாம்  அர்ப்பணிப்பு மற்றும் ராமர் கோயில் பிரதிஷ்டையில் ...

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க த ...

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசு-கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக -வினர் கைது சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் ...

இர தரப்பு உறவை மேலும் வலுப்படுத ...

இர தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஷேக் ஹசீனா மோடிக்கு அழைப்பு இந்தியா - வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவை மேலும் ...

வங்க தேசத்தவர்களுக்கு மருத்து ...

வங்க தேசத்தவர்களுக்கு மருத்துவ விசா -மோடி அறிவிப்பு புதுடில்லி : பிரதமர் மோடி வங்கதேசம் வர வேண்டும் என ...

யோகா தினத்தையொட்டி பிரதமரின் உ ...

யோகா தினத்தையொட்டி பிரதமரின் உரை "யோகா பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருகிறது" "யோகாவினால் ...

ஜம்மு-காஷ்மீர் சொந்த எதிர்கால ...

ஜம்மு-காஷ்மீர்   சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ஸ்ரீநகரின் ஷேர்-இகாஷ்மீர் சர்வதேசமாநாட்டு மையத்தில் (SKICC) நேற்று நடைபெற்ற, ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...