மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அணைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்

சுகாதார நிபுணர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு குழு அமைக்கப்டும்

கொல்கத்தாவின் ஆர்.ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு எதிரான சம்பவத்தைத் தொடர்ந்து தில்லி அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபோர்டா), இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) மற்றும் உறைவிட மருத்துவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் புதுதில்லியில் உள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர்கள்  அதிகாரிகளைச் சந்திததுள்ளனர்.

பணியிடத்தில் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து சங்கங்கள் தங்கள் கவலைகளை முன்வைத்துள்ளன. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பிரதிநிதிகளின் கோரிக்கைகளைக் கேட்டு, சுகாதார நிபுணர்ளின் பாதுகாப்பை உறுதி செய்ய சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என  அவர்களுக்கு உறுதியளித்துள்ளது. அரசு நிலைமையை நன்கு அறிந்துள்ளது என்றும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளது என்றும் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

26 மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் மாநிலங்களில் சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. சங்கங்கள் வெளிப்படுத்திய கவலைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நிபுணர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளையும் பரிந்துரைக்க ஒரு குழுவை அமைப்பதாக அமைச்சகம் அவர்களுக்கு உறுதியளித்தது. மாநில அரசுகள் உட்பட அனைத்து பங்குதாரர்களின் பிரதிநிதிகளும் தங்கள் ஆலோசனைகளை குழுவுடன் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுவார்கள்.

பொது நலன் கருதியும், டெங்கு மற்றும் மலேரியா பாதிப்புகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டும் போராடடத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தங்கள் கடமைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அமைச்சகம் கேட்டுக் கொண்டது..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...