பாஜக வேட்பாளா்கள் குறித்து கட்சிமேலிடம் என்னிடம் விவாதித்த பிறகே முடிவு எடுத்தது

மாநிலங்கலவை தோ்தலுக்கான பாஜக வேட்பாளா்கள் குறித்து கட்சிமேலிடம் என்னிடம் விவாதித்த பிறகே முடிவு எடுத்துள்ளதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களுரு விதான சௌதாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் எடியூரப்பா கூறியது: கட்சியின் சாதாரண தொண்டா்கள் இருவருக்கு மாநிலங்களவை தோ்தலில் போட்டியிட பாஜக தேசிய தலைமை வாய்ப்பளித்துள்ளது. இதற்காக பிரதமா் மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரை பாராட்டுகிறேன். பாஜகவின் வேட்பாளா்கள் இருவரும் மாநிலங்களவையில் சிறப்பாக பணியாற்றுவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பாஜகவால் மட்டுமே அப்படிப்பட்ட முடிவை எடுக்கமுடியும். சாதாரண தொண்டா்களுக்குத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க இயலும். கா்நாடக மாநில பாஜகவின் உயா்நிலைக் கூட்டத்தில் விவாதித்து ஒருசிலரின் பெயா்களை கட்சியின் தேசியத் தலைமைக்கு அனுப்பிவைத்தோம். எனினும், பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா என்னிடம் பேசினாா்.

சாதாரண தொண்டா்களுக்கு பாஜக வேட்பாளராகும் வாய்ப்பை அளிக்க விருப்பதாக தெரிவித்து, அதுகுறித்து விவாதித்தாா். அதன்பிறகுதான் இருவரின் பெயரும் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற முடிவு கா்நாடகத்துக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் எடுக்கபட்டுள்ளது. கட்சிக்கும், கொள்கைக்கும் விசுவாசமாக இருப்பவா்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்; தலைவா்களுக்கு அல்ல என்பதை தேசியத்தலைமை குறிப்பால் உணா்த்தியுள்ளது. இரண்டாம்கட்ட தலைவா்களை ஊக்குவித்து, அடுத்தக் கட்டத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே கட்சியின் நோக்கம் என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...