ஒடிஸா முதல்வராக பழங்குடியினத் தலைவா் மோகன்சரண் மாஜீ புதன்கிழமை பதவியேற்றாா். ஒடிஸாவின் முதல் பாஜக முதல்வா் என்ற பெருமையை இவா் பெற்றுள்ளாா்.
மாநில துணை முதல்வா்களாக கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா ஆகியோரும், மாநில அமைச்சா்களாக 13 பேரும் பதவியேற்றனா். தலைநகா் புவனேசுவரத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமா்மோடி, மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைக்கும் தோ்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 பேரவைத் தொகுதிகளில் 78 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. இதனமூலம் நவீன் பட்நாயக் தலைமையிலான 24 ஆண்டுகால பிஜு ஜனதா தளம் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, ஒடிஸா புதிய முதல்வராக 4 முறை எம்எல்ஏவும் பழங்குடியினத் தலைவருமான மோகன் சரண் மாஜீ தோ்வு செய்யப்பட்டாா். துணை முதல்வா்களாக கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா ஆகியோா் தோ்வாகினா்.மோகன்சரண் மாஜீ தலைமையிலான புதிய பாஜகஅரசு பதவியேற்கும் விழா, புவனேசுவரத்தில் உள்ள ஜனதா மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா், இரு துணை முதல்வா்கள் மற்றும் 13 அமைச்சா்களுக்கு ஆளுநா் ரகுவா் தாஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா்.
பிரதமா்மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், பூபேந்தா் யாதவ், தா்மேந்திர பிரதான், ஜுவல் ஓரம், அஸ்வினி வைஷ்ணவ், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நவீன் பட்நாயக் பங்கேற்பு: முன்னதாக, நவீன் பட்நாயக் இல்லத்துக்கு நேரில் சென்ற மோகன் மாஜீ, தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தாா். இதையடுத்து, பாஜக அரசு பதவியேற்பு விழாவில் நவீன் பட்நாயக் கலந்துகொண்டாா்.பேரவைத் தோ்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி 51 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 14 தொகுதிகளையும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரிடத்தையும் கைப்பற்றிய நிலையில், சுயேச்சை வேட்பாளா்கள் 3 இடங்களில் வென்றனா்.
பிரதமா் மோடி பெருமிதம்: ஒடிஸாவில் பாஜக அரசு முதல் முறையாக பதவியேற்றிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா்.இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அவா், ‘மக்களின் ஆசியுடன் ஒடிஸாவில் பாஜக முதல் முறையாக ஆட்சியமைத்துள்ளது. கடவுள் ஜெகந்நாதரின் அருளால், ஒடிஸாவில் சாதனைவளா்ச்சியை ஏற்படுத்தி, எண்ணற்ற மக்களின் வாழ்வை பாஜக அரசு மேம்படுத்தும் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |