ஹிமாசலில் பாஜக வென்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்

ஹிமாசல் பிரதேச தேர்தலில் பாஜக வென்றால் மாநிலத்தில் பொது சிவில்சட்டம் கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெபி.நட்டா தெரிவித்துள்ளார்.

ஹிமாசல பிரதேச பேரவைத்தோ்தல் நவம்பா் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 413 வேட்பாளா்கள் போட்டி யிடுகின்றனா். தோ்தல் முடிவுகள் டிச.8-ஆம்தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்தத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ் பிரதான போட்டியாளா்களாக உள்ள நிலையில், புது வரவாக ஆம் ஆத்மியும் போட்டியிடுகிறது. இந்நிலையில் ஹிமாசலில் பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா சிம்லாவில் இன்று வெளியிட்டார்.

அதில், தேர்தலில் பாஜக வென்றால் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும். நிபுணர்குழு அமைக்கப்பட்டு அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் பொது சிவில் சட்டம் அமலாகும். மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும். 6ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு பள்ளிகளுக்கு செல்ல மிதிவண்டி வழங்கப்படும். அனைத்து மாவட்டத்திலும் இரண்டு பெண்கள் விடுதிகள் அமைக்கப்படும்.

8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கபடும். அரசு ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் உள்ள முரண்பாடுகள் நீக்கப்படும். பணியின் போது உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்படும். அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு. ஆப்பிள் விவசாயிகளுக்கு சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) 12 சதவீதமாக வரையறுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும ...

பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை நிர்மலா சீதாராமன் பதிலடி மத்திய பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது'' என ...

அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வர ...

அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் சென்னை -பெங்களூர் விரைவுச்சாலை சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ...

தமிழக ரயில் திட்டங்களுக்கு பட் ...

தமிழக ரயில் திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில்  இந்த ஆண்டு ...

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும ...

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழித்தல் நாட்டின் எந்த மாவட்டத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் ...

பசுமை நெடுஞ்சாலை திட்டம்

பசுமை நெடுஞ்சாலை திட்டம் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை பசுமை நெடுஞ்சாலைகளாக மாற்றும் ...

2024-25 -ம் ஆண்டு பட்ஜெட் -அமித் ஷா பா ...

2024-25 -ம் ஆண்டு  பட்ஜெட் -அமித் ஷா பாராட்டு 2024-25-ம் ஆண்டு மத்திய பட்ஜெட், மக்கள் நலனையும், வளர்ச்சியையும் அடிப்படையாக கொண்டுள்ளதென மத்திய ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...