சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் இவரதுமகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஜாதி, மதபாகுபாடின்றி ஒன்றுபட்டு கண்டனக்குரலை எழுப்பி வருகிறார்கள்.

மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து, இந்த வழக்கை விசாரிப்பதும், பிரேத பரிசோதனைகள் அதிகாரிகள் முன்பு பதிவு செய்யப்பட்டிருப்பதும், வழக்கு விசாரணையில் சாட்சிகளை விசாரிப்பது உட்பட அனைத்தையும் கோவில்பட்டி நீதிபதி முன்னின்று செய்திட உத்தரவிட்டிருப்பதும் மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. இந்த மரணங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கோடிக்கணக்கான வணிகர்கள் மீதான காவல்துறையின் பார்வை இதில் அடங்கியிருக்கிறது. இந்த சம்பவத்தில் குற்றம் புரிந்தோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனாவால் நாடே பாதிக்கப்பட்டு அல்லலுற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களோடு இணைந்து காவல்துறையினரும் அரும்பாடு பட்டு பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துதல், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுதல் என பல்வேறு பணிகளை உயிரைப் பணயம் வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு மக்கள் மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தமிழக காவல் துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கமாகும். நேர்மையான விசாரணை, குற்றவாளிகளுக்கு கிடைக்கும் உரிய தண்டனை இதன் மூலம் தான் இந்தக் களங்கம் துடைக்கப்படும்.

எத்தனை நிதி உதவிகள் கிடைத்தாலும், ஜெயராஜ் அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு ஈடு செய்ய முடியாததாகும். ஜெயராஜ் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மீண்டும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவத்திற்கு விரைவான நீதி கிடைத்திடும் வகையில் அக்குடும்பத்தினருக்கு பா.ஜ.க துணை நிற்கும்.

நன்றி  Dr.L.முருகன்

பாஜக மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...