ஒவ்வொரு மாத மும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களிள இருந்து 11-ஆம்நாள் ஏகாதசி வருகிறது . ஒரு வருடத்துக்கு 24 (அ) 25 ஏகாதசிகள் வருகிறது . அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் . வருடம்முழுதும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இயலாதவர்கள், மார்கழி மாத ஏகாதசியான வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதத்தை மேற்கொள்வது சிறப்பான பலன்களை தரும்.
இப்போது ஒவொரு மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி பற்றி பார்ப்போம்
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்ற சிறப்பை பெறுகின்றது. இந்த நாளில் விரதத்தை தொடங்கி தொடர்ந்து_வரும் விரதநாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்) விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை அளவிடமுடியாது.
மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி
மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “உற்பத்தி ஏகாதசி” என்று அழைக்கபடுகிறது .
பலன் ; பகையை வெல்ல உதவும்.
தை மாத வளர்பிறை ஏகாதசி
தை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “புத்ரா” என்று அழைக்கபடுகிறது .
பலன் ; புத்திரபாக்யத்தை தரும். வம்சாவளி பெருக்கத்தை தரும் சந்தான ஏகாதசி ஆகும்.
தை மாத தேய்பிறை ஏகாதசி
தை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “ஸபலா” என்று அழைக்கபடுகிறது. இன்று பழங்களை தானம் செய்யவேண்டும்
பலன் ; ஒளிமயமான வாழ்க்கை_அமையும், இல்லறம் இனிக்கும்.
மாசி மாத வளர்பிறை ஏகாதசி
மாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “ஜயா” என்று அழைக்கபடுகிறது.
பலன் ; அகால மரணமடைந்த நமது மூதாதயர்கள் மோட்சத்தை பெறுவார்கள். மன உளைச்சல் நீங்கும் . வாழ்க்கையில் உருவாகும் விரக்தி நம்மை விட்டு அகலும் .
மாசி மாத தேய்பிறை ஏகாதசி
மாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “ஷட்திலா” என்று அழைக்கபடுகிறது.
மாசி மாத தேய்பிறை ஏகாதசி அன்று கொய்யா பழம் (அ) கொட்டை பாக்கை வைத்து பூஜைசெய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும்.
ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச்சட்டியில் எள்ளுடன் தானம் தரவேண்டும். மேலும் கூடை, பாதுகை, நீருடன் தாமிரக்குடம், கரும்பு, பசு போன்றவற்றையும் சேர்த்து ஆறு பொருளை தானமாக தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறு வகையான பொருளை தானம் செய்வதால் “ஷட்திலா” என்று இந்த ஏகாதசி அழைக்கபடுகிறது.
பங்குனி மாத தேய்பிறை ஏகாதசி
பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “விஜயா” என்று அழைக்கபடுகிறது. இந்த விஜயா ஏகாதசியில் 7 வகையான தானியங்களை ஒன்ற மேல் ஒன்றக அடுக்கு முறையினில் பரப்பி கலசம்வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல்கடந்து சென்று வெற்றி பெறலாம். வெளிநாட்டில் இருக்கும் நமது சொந்தங்கள் சிறப்படைவர் .
கணவனை பிரிந்து வாடும் பெண்கள் கணவனுடன் வெளி நாடு சென்று வாழ்க் கையை தொடங்குவர் .
பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி
பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “ஆமலகீ” என்று அழைக்கபடுகிறது.
ஆமலகீ ஏகாதசியன்று நெல்லி மரத்தடியில் பரசுராமனின் படத்தை வைத்து பூஜைசெய்து நெல்லி மரத்தை 108 முறை சுற்று சுற்றி பூ போட்டால் புண்ணிய நதிகளில் நீராடிய_பலனும், ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனும் கிடைக்கும்.
சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி
சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “காமதா” என்று அழைக்கபடுகிறது.
நமது விருப்பத்தை பூர்த்திசெய்யும் மேன்மை உண்டாகும். திருமணயோகம் தரும்.
சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி
சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “பாபமோசனிகா” என்று அழைக்கபடுகிறது
பாபத்தைபோக்கும் நல்ல பேற்றினை_ஏற்படுத்தும், துரோகிகள் விலகுவர்.
வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி
வைகாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “மோஹினீ” என்று அழைக்கபடுகிறது.
உடல் சோர்வு நீக்கும பெண்களுக்கு உதிரபோக்கை கட்டுப்படுத்தும். ரத்தசோகை அகலும். வளர்ச்சிக்கான கனவுகள் வெற்றி பெறும்.
வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி
வைகாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “வரூதினீ” என்று அழைக்கபடுகிறது.
உடல் ஆரோக்கியத்தை தரும். சவுபாக்யம் அனைத்தும்_ கிடைக்கும்.
ஆனி மாத வளர்பிறை ஏகாதசி
ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “நிர்ஜனா” என்று அழைக்கபடுகிறது. பீம ஏகாதசி எனவும் அழைக்கபடுகிறது. பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜைசெய்வது ஆகும். இந்தநாளில் உள பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடுசெய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிடைக்கும் . வருடம்முழுவதும் உள்ள ஏகாதசி விரதபலன் கிடைக்கும்
ஆனி மாத தேய்பிறை ஏகாதசி
ஆனி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “அபரா” என்று அழைக்கபடுகிறது. இந்த நாளில் மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப்_ பிரதிமையை பூஜைசெய்தால் பத்ரிநாத், ஸ்ரீகேதாரிநாத் யாத்திரைசென்ற பலனும், கயாவில் தர்ப்பண்ம்செய்த பலனும்,பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்தபலனும், சிவராத்திரி விரதபூஜை பலனும் ஒருங்கே செய்தபலன் கிடைக்கும்.
ஆடி மாத வளர்பிறை ஏகாதசி
ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “தயினி” என்று அழைக்கபடுகிறது. இஷ்ட நற் சக்திகளை தரவல்லது. முன்னோர்களின் ஆசியையும், அவர்கள் எதிர்பார்ப்புகளை நம்மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக குவது ஆகும். ஏழைகளுக்கு வஸ்திர தானம் செய்வதினால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் .
ஆடி மாத தேய்பிறை ஏகாதசி
ஆடி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “யோகினி” என்று அழைக்கபடுகிறது. யோகினி ஏகாதசியில் வெண்கலம் (அ) பித்தளை விளக்கு, வசதி படைத்தவர்கள் வெள்ளி விளக்குதானம் செய்ய கனவிலும் நினைக்காத கற்பனைக்கு எட்டாத வாழ்க்கை அமைய பெரும் .
ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “புத்ரதா” என்று அழைக்கபடுகிறது.
பலன் ; குழந்தைகள் கல்வியில் சிறந்தவர்களாக இருப்பார்கள், விரும்பிய மேல்படிப்பு அமையவும்,
ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி
ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “காமிகா” என்று அழைக்கபடுகிறது.
காமிகா ஏகாதசியன்று விரதம் இருந்து தனி துளசியினால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடுசெய்ய சொர்ணம் வீட்டில் தங்கும். பூஜையை முடித்த பிறகு ஆலயம் சென்று ஐந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடுசெய்தால் மனபயம் மற்றும் மரண பயம் நீங்கும் , கொடிய துன்பங்கள் விலகும்.
ஆவணி மாதத்தில் ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பழங்களை மட்டுமே உண்டு விரதத்தை மேற்கொள்ள வேண்டும். காய்கறிகளை பயன்படுத்த கூடாது.
புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி
புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “பத்மநாபா” என்று அழைக்கபடுகிறது.
இந்த பத்மநாபா ஏகாதசி அன்று விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம் . தண்ணீர் பற்றாகுறை வராது நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில தண்ணீர் வற்றாமல்_பெருக்கெடுக்கும்.
புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசி
புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “அஜா” என்று அழைக்கபடுகிறது.
இந்த நாளில்தான் அரிச்சந்திரன் விரதமிருந்து தாம் இழந்த நாடு , மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே நாமும் இவ்விரதநாளில் விரதம் கடைபிடித்தால், குடும்பத்துடன் ஆனந்தமாக இருக்கலாம். புரட்டாசி மாத ஏகாதசியன்று கண்டிப்பாக தயிர் உபயோகிக்க (சேர்க்க கூடாது) கூடாது.
ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி
ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “பாபாங்குசா” என்று அழைக்கபடுகிறது
பலன் ; வறுமை , நோய் மற்றும் பசிப்பினி நீங்கும், நிலைத்த நிம்மதியும் , தீர்த்த யாத்திரைக்கு சென்ற புண்ணியமும் கிடைக்கும்.
ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி
ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “இந்திரா” என்று அழைக்கபடுகிறது
இந்திரா ஏகாதசி விரதமிருந்து மூதாதயருக்கு சிரார்த்தம்_செய்தால் அவர்கள் இந்திர வாழ்வை வைகுண்டத்தில் பெறுவர்,
நம்மையும் மனங் குளிர இறைவன் வைக்கவேண்டும் என்று அருகில் இருக்கும் பகவானிடம் பரிந்துரைப்பார்கள் . ஐப்பசி மாத ஏகாதசி அன்று பால் சாப்பிட கூடாது.
கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி
கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “ப்ரமோதினீ” என்று அழைக்கபடுகிறது.
கைசிக ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. கிடைக்கும் அனைத்து_பழங்களையும் பகவானுக்கு நிவேதனம்செய்து வேண்டி கொண்டால் மங்கள வாழ்வு_மலரும், பூலோக சொர்க்கவாழ்வு கிடைக்கும்.
கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி
கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “ரமா” என்று அழைக்கபடுகிறது.
ரமா ஏகாதசி அன்று இருக்கும் விரதம் இருபத்தி யோரு தானம்செய்த புண்ணியத்தை தரவல்லது.
கமலா ஏகாதசி
வருடத்தில் கூடுதலாக_வரும் 25தாவது ஏகாதசி “கமலா” என்று அழைக்கபடுகிறது.
கமலம் என்பது தாமரையாகும் . தாமரை மலரிலிருந்து அருள் புரியும் அன்னை மகாலட்சுமியை இந்தநாளில் பூஜித்தால் நிலைத்த செல்வம் நிரந்தரமாக நம் வீட்டில் இருந்துவரும். ஆக பெருமாளின் 25 சக்திகளுக்கும் தனி தனி விரதமாக_இருப்பது,
வைகுண்ட ஏகாதசியில் (மோட்ச ஏகாதசி) உண்ணாமல் அன்று முழுவதும் மட்டு மின்றி முன் பின் நாட்கள் பகலில்_உறங்காமல் இருந்துசெய்யும் வைகுண்ட ஏகாதசி விரதம் அனைத்து ஏகாதசியின் பலன்களையும் தரும்.
Tags; மாத ஏகாதசிகளும், அதன் பலன்களும், மார்கழி மாத, ஏகாதசி, தை மாத, மாசி மாத, பங்குனி மாத
You must be logged in to post a comment.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
3duality