இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் பெருக்கும், கிழங்கை உண்டால் உடலை உரமாகச் செய்து காமத்தை உண்டாக்கும். இதை அரைத்துக் கட்டிகளின் மேல் போட கட்டிகள் கரையும். உறக்கம் உண்டாக்கும், தாது வெப்பத்தைப் போக்கும் தீபனம் (பசி) உண்டாக்கும்.
அமுக்கிரா கிழங்கைப் பச்சையாகக் கொண்டு வந்து பசுவின் நீர் விட்டு அரைத்து, கொதிக்க வைத்து கிரந்தி, கண்டமாலை, வாதவீக்கம், இடுப்பு வலி மீது பற்றுப் போடக் குணமாகும்.
சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்துக் கட்டிகளின் மேல் போடக் கட்டி கரையும்.
அமுக்கிராக்கிழங்கு சூரணத்தை 1 பங்குடன் 3 பங்கு கற்கண்டு சர்க்கரை சேர்த்து வேளைக்கு 5 கிராம் முதல் 10 கிராம் வரை, காலை, மாலை உண்டு,பசும்பால் குடித்து வர, சுக்கிலநட்டம், நரம்புத் தளர்ச்சி இவை நீங்கி உடல் வலிவும், வசீகரமும் உண்டாகும்.
அசுவகந்தியைக் கொண்டு, சூரணம், லேகியம், தைலம், முறைப்படி செய்து உபயோகித்தால் உடலுக்கு நல்ல பலன் உண்டாகும்.
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.