பா.ஜ., எம்.பி.,யை தள்ளிவிட்டதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது, காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் ஏற்பட்ட மோதலில் பா.ஜ.,வை சேர்ந்த ஒடிசா எம்.பி., சாரங்கி மண்டை உடைந்தது. இன்னொரு பா.ஜ., எம்.பி., முகேஷ் ராஜ்புத் என்பவரும் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு டில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கிரண் ரிஜிஜூ அளித்த பேட்டி: ராகுல் தாக்கியதில் பா.ஜ., எம்.பி முகேஷ் ராஜ்புத் காயம் அடைந்து இருக்கிறார். எம்.பி.,க்கு சிறிது ரத்தம் கசிந்துள்ளது. தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ., எம்.பி.,யை தள்ளிவிட்டதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ராகுல் தனது வலிமையை காட்ட, பா.ஜ., எம்.பி.,க்களை தாக்கியது சரியல்ல. காங்கிரஸ் எம்.பி., ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் ராகுலிடம் கூற விரும்புகிறேன். வன்முறையில் ஈடுபட, ராகுலுக்கு அதிகாரம் வழங்கியது யார்? எம்.பி.க்கள் மீது ராகுலின் உடல்ரீதியான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
இது ராகுலின் கோபம், விரக்தியை காட்டுகிறது. ராகுலுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. இதற்கு தக்க நடவடிக்கை எடுப்போம் என்று ராகுலிடம் கூற விரும்புகிறேன். நாங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைப்பதால் மட்டும், உடல் ரீதியாக பழிவாங்கவில்லை. நாங்கள் எங்கள் உடல் வலிமையை மற்ற எம்.பி.க்களுக்கு எதிராக பயன்படுத்த மாட்டோம். ஏனென்றால் நாங்கள் அதை நம்பவில்லை. நாங்கள் அகிம்சையை நம்புகிறோம். நாங்கள் அகிம்சையில் நம்பிக்கை வைப்பதாலும், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைப்பதாலும் வன்முறையில் ஈடுபடுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ராகுல் மீது போலீசில் புகார் அளிக்க பா.ஜ., கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |