லோக்பால் விவகாரத்தில், பார்லிமென்டை மத்திய அரசு திசை திருப்பிவிட்டது; அருண் ஜெட்லி

லோக்பால் மசோதா விவகாரத்தில், பார்லிமென்டை மத்திய அரசு திசை திருப்பிவிட்டது. எனவே, இந்த மசோதா நிறைவேற நீங்கள் தலையிட வேண்டும்; பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் பா.ஜ., தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தலைமையில், அந்தக் கட்சியின் தலைவர்கள் நேற்று, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்துப் பேசினர். அப்போது, பார்லிமென்டின் சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டி, மனு ஒன்றையும் அளித்தனர்.

சந்திப்புக்குப் பின், நிருபர்களிடம் பேசிய, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி கூறியதாவது: சர்ச்சைக்குரிய லோக்பால் மசோதா விவகாரத்தில், ராஜ்யசபாவில் ஓட்டெடுப்பு நடக்காத வகையில், இந்திய பார்லிமென்டரி அமைப்பையே, மத்திய அரசு முழுமையாக திசை திருப்பிவிட்டது. அதனால், பார்லிமென்ட் கூட்டத்தொடரை மீண்டும் கூட்டும்படி, மத்திய அரசுக்கு ஆலோசனை சொல்ல வேண்டும் என, ஜனாதிபதியை கேட்டுக் கொண்டோம். ராஜ்யசபாவில் மீண்டும் ஓட்டெடுப்பு நடக்கச் செய்ய வேண்டும் என, வலியுறுத்தினோம். கடந்த டிசம்பர் 29ம் தேதி இரவு, ராஜ்யசபாவில் நடந்த நிகழ்ச்சிகளை ஜனாதிபதியிடம் விவரித்த நாங்கள், எங்களின் அதிருப்தியை தெரிவித்ததோடு, ஜனாதிபதி இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். எங்களின் புகாரைக் கேட்ட ஜனாதிபதி, அனைத்து அம்சங்களையும் ஆலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

லோக்பால் மசோதாவில், எதிர்க்கட்சியினர் பல திருத்தங்களைக் கொண்டு வந்தனர். அவையெல்லாம், லோக்பாலுக்கு தனி புலனாய்வு நிறுவனம் தேவை, லோக்பால் அமைப்பிற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதில், அரசின் தலையீடு இருக்கக் கூடாது என்ற பொதுவான திருத்தங்களே. இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...