பண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு கட்டங்களில் பயன்படுத்த வேண்டும். “வாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெளிச்சத்தைத் தருகிறது” என்னும் புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர் கோரூரு ராமசாமி ஐயங்கார் அவர்களின் வார்த்தைகளை நினைவு கூறத்தக்கது.
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய கல்வி முறையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது , உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வியின் சர்வதேசமையமாக இந்தியாவை மாற்றுவதற்கும், நமது இளைஞர்களை போட்டித்திறன் மிக்கவர்களாக ஆக்குவதற்கும் அதிக எண்ணிக்கையிலும், சிறப்பான முறையிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆறு வருடங்களில் சராசரியாக ஒரு வருடத்துக்கு ஒரு ஐஐடி திறக்கப்பட்டு கொண்டிருக்கிறது. 2014-இல் இந்தியாவில் வெறும் 9 ஐஐடிக்களே இருந்தன. அதைத் தொடர்ந்து வந்த ஐந்துவருடங்களில் 16 ஐஐடிக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.கடந்த ஐந்தாறு வருடங்களில் 7 புதிய ஐஐஎம்கள் நிறுவப்பட்டுள்ளன. அதற்கு முன்பு இந்தியாவில் வெறும் 13 ஐஐஎம்களே இருந்தன .
கடந்த ஆறு தசாப்தங்களாக வெறும் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே நாட்டில் சேவைகளை வழங்கிவந்தன. 2014க்குப் பிறகு எட்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன அல்லது நிறுவப்பட்டுக் கொண்டிருக்கின்றன .
கடந்த 5-6 வருடங்களில் உயர்கல்வித் துறையில் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் புதிய கல்வி நிறுவனங்களை நிறுவுவது தொடர்பானது மட்டுமே அல்ல இந்த நிறுவனங்களில் பாலின மற்றும் சமூகபங்கு பெறுதலுக்கான சீர்திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன , இத்தகைய நிறுவனங்களுக்கு அதிக தன்னாட்சி வழங்கப்பட்டு வருகிறது .
முதல் ஐஐஎம் சட்டம் நாடு முழுவதிலும் உள்ள ஐஐஎம்களுக்கு அதிக உரிமைகளை வழங்கியுள்ளது . மருத்துவ கல்வியில் அதிகவெளிப்படைத் தன்மையை கொண்டு வர தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கபட்டுள்ளது. ஹோமியோபதி மற்றும் இதர இந்தியமருத்துவ முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர இரண்டு புதியசட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
நாட்டின் கல்வித் துறையில் அனைத்து மட்டங்களிலும், பெண் குழந்தைகளின் மொத்தசேர்க்கை விகிதம் ஆண்களைவிட அதிகமாக உள்ளது .
நெகிழ்வுத் தன்மைமிக்க மற்றும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் கல்வி முறையின் மூலம் நமது இளைஞர்களை போட்டிதிறன் மிக்கவர்களாக ஆக்க பல முனைகளில் தேசிய கல்விக்கொள்கை கவனம் செலுத்திவருகிறது .
மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா 2020-இல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றியது.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |