ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் களிமண் சேர்த்துப் பிசைந்து கூந்தலின் அடிப்பகுதி வரை நன்றாகத் தேய்த்து 1௦ நிமிடம் ஊறிய பின் தலைமுழுக வேண்டும், இந்த விதமாக வாரத்திற்கு இருமுறை செய்தால் போதும். பொடுகு மறைந்து விடும்.
ஆவாரைக் கொழுந்து இலைகளைப் பறித்து வந்து சுத்தம் செய்து, ஒரு சுத்தமான மண் சட்டியை எடுத்து அதனுள் இந்த இலைகளை இரண்டுவிரல் கனத்திற்கு ஒரே அளவாக மட்டமாகப் பரப்பிவிட்டு, வெள்ளாட்டுக் கல்லீரலில் உள்ள பித்தப்பை எந்தப் பக்கமாக இருக்கிறதோ அந்தப் பக்கமாக, பித்தப் பையுடன் கூடிய ஈரல் துண்டு ஒன்று, தேவையான அளவில் நறுக்கி, பரப்பிய இலையின் மேல் மட்டமாக வைத்து , ஈரல் துண்டின் மேல் இரண்டு விரற்கடை அளவு, ஆவாரைக் கொழுந்தைப் பரப்பி, சட்டியை மூடி அடுப்பில் வைத்து வேகவிட வேண்டும். ஈரல் வெந்த பின் எடுத்து பித்தப்பையுடன் தின்றுவிட வேண்டும். இந்த விதமாக ஒரு நாள் விட்டு, ஒரு நாள் வீதம் ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.