மறைந்த நடிகர் எம்.என். நம்பியாரின் மகன் சுகுமாரன் நம்பியார் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.அவருக்கு வயது 64. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் .
சுகுமாரன் நம்பியார் ஒரு சிறந்த தேச பக்தர். அமைதியாக எந்த ஆரவாரமும் இல்லாமல் செயலாற்றுவது இவரது இயல்பு ஆகும்.
இவர் மத்திய கறுப்பு பூனைபடைக்கு பயிற்சியாளராகவும் இருந்தவர் . மேலும் தமிழகத்தில் கறுப்பு பூனை படையை உருவாக்கிய பெருமையை பெற்றவர் ,
இவர் பாஜகவில் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். முன்னதாக, பாஜகவின் தமிழ்நாடு மாநிலப்பிரிவில் பொருளாளர் உள்ளிட்ட பல் வேறு பதவிகளில் இருந்தவர்.
நல்ல ஆன்மீக சிந்தனைவாதி . வருடம் வருடம் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம்செய்து வருவது இவரது வாடிக்கை. சுவாமி தயானந்தா சரஸ்வதி அவர்கள் வழிகாட்டுதலில் செயல்பட்டு வருகின்ற தர்ம ரக்ஷண சமிதி என்கிற அமைப்பிற்கு பக்க பலமாக இருந்து செயல்பட்டு வந்தார். இது தவிர· அகில இந்திய ஐயப்ப சேவா சங்க தலைவராக பொறுப்பேற்று சபரிமலை வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம், மருத்துவ உதவிகள், உட்பட பல உதவிகள் செய்து தருவதற்கு அரும்பாடுபட்டு வந்தார்.
மரணம் அடைந்த எம்.என்.சுகுமாறன் நம்பியாரின் மனைவி பெயர் லட்சுமி (வயது 54) இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கு, சித்தார்த் (26), பாரத் (22) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
சித்தார்த் ஆடிட்டருக்கு படித்து வருகிறார். பாரத் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் அனைவராலும் மதிக்கப்பட்ட ஒருவராக அவர் இருந்து வந்தார். அகில இந்தியத் தலைவர்கள் எல்.கே அத்வானி வாஜ்பாயி போன்ற தலைவர்களுடன் நல்ல தொடர்பு கொண்டிருந்தார். அன்னாரது திடீர் மறைவு பாரதீய ஜனதாவுக்கு பேரிழப்பாகும்.
சுகுமாறன் நம்பியார் உடலுக்கு, அகில இந்திய பா.ஜ.க. செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவருமான இல.கணேசன்,தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைப்பு பொதுச்செயலாளர் மோகன் ராஜுலு, பா.ஜ.க. அகில இந்திய செயற்குழு உறுப்பினர் லலிதா குமாரமங்கலம், மாநில செயலாளர் வானதி சீனிவாசன், `மாநில செயற்குழு உறுப்பினர் லலிதா சுபாஷ், பா.ஜ.க.மாநில துணைத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், ஆடிட்டர் குருமூர்த்தி, `இந்து’ என்.முரளி,நிர்வாகி குமாரவேலு, செய்தி தொடர்பாளர் பாலாஜி.முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், படஅதிபர் ஏவி.எம்.சரவணன், டைரக்டர் பி.வாசு, நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், மகள் சாந்தி, பா.ஜ.க. சென்னை மாவட்ட தலைவர்கள் ஜெய்சங்கர், பிரகாஷ், ரவிசந்திரன், நடிகர் பிரதாப் போத்தன், உள்பட ஏராளமானோர் மலர்வளையம், மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அன்னாரின் மறைவுக்கு தமிழ் தாமரை தனது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகின்றது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைந்திட அனைவரும் பிரார்த்தனை செய்திடுவோம்.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.