உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில், பாஜக.வுக்கு ஆதரவாக அகிலஇந்திய சாதுக்கள் சபை (அகில பாரதிய அஹடா பரிஷத்) பிரச்சாரம் செய்கிறது.
இந்துமதத்தின் சாதுக்கள் எனப்படும் துறவிகளின் சபை உ.பி.யில் அதிகம். இவர்களுக்கு பலலட்சம் எண்ணிக்கையில் பக்தர்கள் உண்டு. வடமாநிலங்களில் அதிகமுள்ள அனைத்து சாதுக்கள் சபைக்கான தலைமைசபை உ.பி.யின் அலகாபாத்தில் செயல்படுகிறது. அகில இந்திய சாதுக்கள் சபை எனும் பெயருடைய இதன் புதிய தலைவராக மஹந்த் ரவீந்திராபுரி கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்வு செய்யபட்டார். முக்கிய சாதுக்கள் சபையில் ஒன்றான நிரஞ்சனி அஹடாவின் தலைவராகவும் அவர் பொறுப்புவகிக்கிறார். இவரது சார்பில் அனைத்து அஹடாக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினருக்கு உ.பி. தேர்தலில் பாஜகவெற்றிக்காக நடவ டிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |