பிரதமரின் மீதான எனது அன்பு அசைக்கமுடியாது ஜனசக்தி கட்சித்தலைவர் பேச்சு

”நரேந்திர மோடி மீதான எனது அன்பு அசைக்க முடியாதது. அவர் பிரதமராக இருக்கும் வரை என்னை அவரிடம் இருந்து பிரிக்க முடியாது” என லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.

பீஹாரில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகனான சிராக் பஸ்வான், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவராக உள்ளார். லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி, ஐந்திலும் வென்றது. சிராக் பஸ்வானுக்கு மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. வக்பு வாரிய சட்டத்திருத்தம், உயர் பதவிகளில் லேட்டரல் என்ட்ரி முறை உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை கூட்டணிக்குள் இருந்தாலும் விமர்சித்து வந்தார். இதனால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவார் என பல்வேறு யூகங்கள் கிளம்பின.

இது பற்றி சிராக் பஸ்வான் கூறியதாவது: நரேந்திர மோடி மீதான எனது அன்பு அசைக்க முடியாதது. அவர் பிரதமராக இருக்கும் வரை என்னை அவரிடம் இருந்து பிரிக்க முடியாது. எனது கருத்துக்கள் எப்போதும் அரசின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றன. வக்பு வாரிய மசோதாவை பார்லி., கூட்டு குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறியது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. எங்கள் கட்சி பீஹார் மாநிலத்திலும், மத்தியிலும் பா.ஜ., உடன் கூட்டணியில் உள்ளது. எனவே, தேசிய அளவிலும், மாநிலத்திலும் நாங்கள் கூட்டணி தர்மத்தைக் கடைபிடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...